சைலண்டாக சம்பவம் செய்த Vivo.. ரூ.7999 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி.. டூயல் கேமரா.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?
விவோ (Vivo) நிறுவனம் தனது புதிய விவோ ஒய்19இ (Vivo Y19e) ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதுவும் 5500mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், டூயல் ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ ஒய்19இ போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ ஒய்19இ அம்சங்கள் (Vivo Y19e specifications): 6.74 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே (HD+ display) வசதியுடன் விவோ ஒய்19இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 × 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் யுனிசாக் டி7725 சிப்செட் (Unisoc T7725 Chipset) உடன் விவோ ஒய்19இ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் விவோ ஒய்19இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த விவோ போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
13எம்பி பிரைமரி சென்சார் (primary sensor) + 08எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ ஒய்19இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஒய்19இ ஸ்மார்ட்போன். மேலும் ஃபேஸ் ரெகக்னிஷன் (face recognition)அம்சத்துடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வருகிறது இந்த அசத்தலான விவோ ஸ்மார்ட்போன்.

5500mAh பேட்டரி உடன் விவோ ஒய்19இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (15W fast charging) வசதியும் உள்ளது. பின்பு டைட்டானியம் சில்வர் (Titanium Silver) மற்றும் மெஜஸ்டிக் கிரீன் (Majestic Green) நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்19இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட், விவோ இந்தியா இ- ஸ்டோர் தளங்களில் வாங்க கிடைக்கிறது. இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு ஜியோ (jio) சார்பில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








