விவோ Y19 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?
விவோ நிறுவனத்தின் விவோ Y19 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டூச் ஓஎஸ் 11 அப்டேட் கிடைத்துள்ளது. இந்த அப்டேட் விவோ பயனர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றே தான் கூறவேண்டும்.

ஆண்ட்ராய்டு 11
கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யபட்டது. குறிப்பாக விவோ Y19 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டூச் ஓஎஸ் 11 அப்டேட் வசதியை பெற்றுள்ளதால் இனிமேல் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு அப்டேட். மேலும் இந்தத சாதனத்தின் பல்வேறு அம்சங்களை இப்போது பார்ப்போம்.

1080 x 2340 பிக்சல் தீர்மானம்
விவோ Y19 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் கொண்டு விவோ Y19 வெளிவந்துள்ளதால் பல்வேறு மக்களை கவரும் வகையில் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65(எம்டி6768) சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9.0 உடன் ஃபன்டச் ஒஎஸ் 9.2 இயங்குளத்தை கொண்டு வெளிவந்தது இந்த ஸ்மார்ட்போன்,இப்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது.

16எம்பி பிரைமரி சென்சார்
இந்த விவோ Y19 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

விவோ Y19 சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y19 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், வோல்ட்இ,மைக்ரோ யுஎஸ்பி போர்ட் 2.0, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications