மூன்று ரியர் கேமராக்களுடன் அசத்தலான விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

விவோ நிறுவனம் வியட்நாம் நாட்டில் புதிய விவோ Y19 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

விவோ Y19 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் கொண்டு விவோ Y19 வெளிவந்துள்ளதால் பல்வேறு மக்களை கவரும் வகையில் உள்ளது.

 சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65(எம்டி6768) சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 உடன் ஃபன்டச் ஒஎஸ் 9.2 இயங்குளத்தை கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இனிமேல் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு "அந்த" சலுகை கிடையாது.! அதிரடி அறிவிப்பு.!

கேமரா அமைப்பு

கேமரா அமைப்பு

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

விவோ Y19 சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் ஆப்: ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் சாட் செய்யலாம்!வாட்ஸ் ஆப்: ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் சாட் செய்யலாம்!

 பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

விவோ Y19 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், வோல்ட்இ,மைக்ரோ யுஎஸ்பி போர்ட் 2.0, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனி இந்திய விலைப் பற்றி தெளிவாக தெரியவில்லை,அப்டேட் கிடைத்தவுடன் உடனே தெரிவிக்கிறோம்.

Best Mobiles in India

English summary
Vivo Y19 officially launched: Full specifications and more: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X