சத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
அன்மையில் விவோ நிறுவனம் வியட்நாம் நாட்டில் புதிய விவோ Y19 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. தற்சமயம் சத்தமின்றி இந்தியாவிலும் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே
விவோ Y19 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் கொண்டு விவோ Y19 வெளிவந்துள்ளதால் பல்வேறு மக்களை கவரும் வகையில் உள்ளது.

சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65(எம்டி6768) சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்புஆண்ட்ராய்டு 9.0 உடன் ஃபன்டச் ஒஎஸ் 9.2 இயங்குளத்தை கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாகஇருக்கும்.

கேமரா அமைப்பு
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் எனபல்வேறுவசதிகள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு வசதி
விவோ Y19 சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
விவோ Y19 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை,
ஜிபிஎஸ், வோல்ட்இ,மைக்ரோ யுஎஸ்பி போர்ட் 2.0, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விவோ Y19 விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி விவோ Y19 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,990-விலையில் விற்பனைசெய்யப்படுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் சில ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications