Home
Mobile

வெறும் ரூ.7999 போதும்.. எல்சிடி டிஸ்பிளே.. 5000எம்ஏஎச் பேட்டரி.. அறிமுகமானது புது Vivo போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்18ஐ ( Vivo Y18i) ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், 5000எம்ஏஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது இந்த போன். இப்போது விவோ ஒய்18ஐ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ ஒய்18ஐ அம்சங்கள் (Vivo Y18i specifications): 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே (HD+ LCD display) வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்18ஐ ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1612 × 720 பிக்சல்ஸ், 520 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

வெறும் ரூ.7999 போதும்..  அறிமுகமானது புது Vivo போன்.. எந்த மாடல்?

தரமான யுனிசாக் டைகர் டி612 (Unisoc Tiger T612) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்18ஐ ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் FunTouch OS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு வழங்கப்படும்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்18ஐ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

13எம்பி பிரைமரி கேமரா + 0.8எம்பி செகண்டரி செனசார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ ஒய்18ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்18ஐ போன். எனவே இந்த போனை வாங்கும்; பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

வெறும் ரூ.7999 போதும்..  அறிமுகமானது புது Vivo போன்.. எந்த மாடல்?

IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant) கொண்டுள்ளது விவோ ஒய்18ஐ ஸ்மார்ட்போன். மேலும் 4ஜி எல்டிஇ (4G LTE), வைஃபை (Wi-Fi), ஜிபிஎஸ் (GPS), புளூடூத் (Bluetooth), 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C port) உள்ளிட்ட பல்வேற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

விவோ ஒய்18ஐ ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்க கிடைக்கும் எனவும், விரைவில் ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த புதிய போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y18i Launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X