பொளக்குது விற்பனை.. ரூ.7000 விலையில் புது 4G மொபைல்.. Vivo-வுக்கு ரொம்ப பெரிய மனசுப்பா.. என்ன மாடல்?
விவோ (Vivo) நிறுவனம் இந்தியாவில் விவோ Y18i (vivo Y18i) என்ற புதிய ஸ்மார்ட்போன் சாதனை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் மிகவும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன் (4G Smartphone) என்ற பட்டியலின் கீழ் இந்த புதிய விவோ Y18i ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விவோ Y18i சாதனம் விவோவின் சமீபத்திய அறிமுகங்களான விவோ Y18 (vivo Y18) மற்றும் விவோ Y18e (vivo Y18e) மாடலை தொடர்ந்து இந்தியாவிற்குள் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய விபரங்கள் இதோ.
மலிவு விலையில் புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது என்றாலோ, அல்லது உங்களது பட்ஜெட் ரூ.10,000 கூட இல்லை, அதை விட குறைவு தான் என்றாலோ, நீங்கள் கண்களை மூடிக்கொண்டு வாங்கும் சிறந்த தேர்வாக அமைந்திருக்கும் சாதனம் தான் இந்த vivo Y18i ஸ்மார்ட்போன். இந்த போன் ரூ. 7,999 விலையில் அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது.

மலிவு விலையில் விவோ அறிமுகம் செய்த புதிய விவோ Y18i 4ஜி (vivo Y18i 4G):
இந்த புதிய விவோ Y18i (vivo Y18i) ஸ்மார்ட்போன் சாதனம் 6.56" இன்ச் கொண்ட 1612 × 720 பிக்சல்கள் உடைய எச்டி+ எல்சிடி (HD+ LCD) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த மலிவு விலையில் இந்த ஸ்மார்ட்போனில் விவோ நிறுவனம் 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இது ஸ்மூத்தான அனுபவத்தை வழங்குகிறது. இது HD+ LCD டிஸ்பிளே வீடியோ தரத்திலும் சிறப்பாக அமைகிறது.
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஆக்டா கோர் யூனிஸாக் T612 சிப்செட் உடன் வருகிறது. இதுவொரு 12nm சிப்செட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விவோ Y18i (vivo Y18i) ஸ்மார்ட்போன் சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி விர்ச்சுவல் ரேம் உடன் வருகிறது. இந்த டிவைஸ் 64GB ஸ்டோரேஜ் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 14 உடன் ஃபன்டச் ஓஎஸ் 14 உடன் இயங்குகிறது.
கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக இதில் 1TB வரையிலான மெமரியை ஆதரிக்கும் மைக்ரோஎஸ்டி (microSD card slot) ஆதரவுடனும் வருகிறது. இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இந்த போன் 13MP + 0.08MP கொண்ட டூயல் கேமரா மற்றும் 5MP ஃபிரண்ட் கேமரா அம்சத்துடன் வருகிறது. இது 5000mAh பேட்டரி உடன் 15W சார்ஜிங் உடன் வருகிறது.
விவோ Y18i விலை என்ன? (vivo Y18i Price):
இந்த புதிய விவோ Y18i (vivo Y18i) ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், இது இந்திய சந்தையில் தற்போது மிகவும் மலிவான ஸ்மார்ட்போன் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், புதிய விவோ Y18i (vivo Y18i) 4GB + 64GB ஸ்டோரேஜ் மாடல் இப்போது இந்தியாவில் வெறும் ரூ. 7999 என்ற விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.
இது ஜெம் க்ரீன் (Gem Green) மற்றும் ஸ்பேஸ் பிளாக் (Space Black) நிறங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கங்கள் வழியாக வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








