வெளுத்து கட்டிய விவோ.. ரூ.8000 பட்ஜெட்ல 1டிபி மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
பட்ஜெட்டில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 8 ஜிபி ரேம், 1டிபி மெமரி, டூயல் கேமரா, 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் விவோ ஒய்18இ (Vivo Y18e) போன் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
விவோ ஒய்18இ அம்சங்கள் (Vivo Y18e Specifications): இந்த விவோவில் 6.56 இன்ச் (1612 × 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 528 பீக் பிரைட்னஸ், 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி (Pixel Density) கொடுக்கப்பட்டுள்ளது.

எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்டுள்ளது. ஃபன்டச் ஓஎஸ் 14.0 (Funtouch OS 14.0) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.
இந்த விவோ ஒய்18இ போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும், 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microaSD) கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.
ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா + 0.08 எம்பி செகண்டரி லென்ஸ் (Secondary Lens) கொண்டிருக்கிறது. நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), லைவ் போட்டோ (Live Photo) போன்ற பீச்சர்கள் இந்த கேமராவில் வருகின்றன. 5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

இந்த கேமராவிலும் நைட் மோட், போர்ட்ராய்டு மோட் போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த விவோ ஒய்18இ போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி உடன் 8.39 மிமீ தடிமன் மற்றும் 185 கிராம் எடை கொண்டிருக்கிறது. ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Fingerprint Sensor) கொடுக்கப்படவில்லை.
யுஎஸ்பி-சி போர்ட் (USB-C Port) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) கொண்டிருக்கிறது. இந்த விவோ மாடலின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், டூயல் 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS), டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) ஆகியவை வருகின்றன.
IP54 டஸ்ட்ப்ரூப் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த விவோ ஒய்18இ போனில் ஸ்பேஸ் பிளாக் (Space Black), ஜெம் கிரீன் (Gem Green) ஆகிய 2 கலர்கள் வெளியாகி இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் விவோ இந்தியா வெப்சைட்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், விலை விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
இருப்பினும், இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7,999ஆக இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், இதற்கு முந்தைய மாடலான விவோ ஒய்18 போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருந்தது.


Click it and Unblock the Notifications