அரளுது பட்ஜெட்.. ரூ.10000க்கு 5000mAh பேட்டரி.. 8GB ரேம்.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிசிறு தட்டாத டிசைனிலும், மலிவான பட்ஜெட்டிலும் 8 ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், எச்டிபிளஸ் டிஸ்பிளே, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்காவான அம்சங்களுடன் விவோ ஒய்17 எஸ் (Vivo Y17s) போன் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
விவோ ஒய்17 எஸ் அம்சங்கள் (Vivo Y17s Specification): இந்த விவோ மாடல் 6.56 இன்ச் (1612 × 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) சன்லைட் (Sunlight) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 840 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 60Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 13 (FuntouchOS 13) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட் கொண்டுள்ளது. இந்த விவோ போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உள்ளது.
ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் வருகிறது. அதோடு 1 டிபி வரை மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano Sim Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி சிலாட் வருகிறது.
இந்த போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா இருக்கிறது.
இந்த கேமராவில் எச்டிஆர் (HDR) மற்றும் போக்கே (Bokeh) சப்போர்ட் உள்ளது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. மேலும் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) வருகிறது. இந்த போன் ஸ்லிம் டிசைனில் இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், இதன் எடை வெறும் 186 கிராம் மட்டுமே உள்ளது.
அதேபோல 163.74 மிமீ நீளம், 75.43 மிமீ அகலம் மற்றும் 8.09 மிமீ தடிமன் கொண்டுள்ளது. இந்த விவோ போன் ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green) மற்றும் கிளிட்டர் பர்பிள் (Glitter Purple) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் மற்ற அம்சங்கள் விவோ ஒய்17 (Vivo Y17) மாடலில் கொடுக்கப்பட்டதை போலவே இருக்க வாய்ப்புள்ளது.
அதையும், இந்த போனின் விலை எவ்வளவு இருக்கும் என்பதையும் இப்போது பார்ப்போம். இந்த விவே ஒய்17 மாடலில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. அதோடு 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வருகிறது. டைப் - சி சார்ஜிங் போர்ட் வருகிறது.
இந்த அம்சங்களை எல்லாம் வைத்து பார்க்கும்போது, ரூ.10,000 பட்ஜெட்டில், இந்த விவோ ஒய்17 எஸ் போன் விற்பனைக்கு வர அதிக வாய்ப்புள்ளது. இந்த போனின் முழு அம்சங்களும் கசிந்துவிட்டதால், அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என்று மார்கெட் வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கம்மியான விலையில் பக்காவான அம்சங்களை கொண்ட போனாக இந்த மாடல் இருப்பதால், விவோ பிரியர்கள் கவர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications