ஆர்டர் அதிரும்.. 50MP கேமரா..128GB மெமரி.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது விவோ போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ ஒய்17 எஸ் (Vivo Y17s) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான அம்சங்கள் மற்றும் படஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது விவோ ஒய்17 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1612 x 720 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 700 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் (Mediatek Helio G85 processor) உடன் இந்த விவோ ஒய்17 எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போனில் பிராசஸர் அமைந்துள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இதை நம்பி வாங்கலாம்.
இந்த விவோ ஒய்17 எஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ ஒய்17 எஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தம் புதிய விவோ ஒய்17 எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த விவோ ஒய்17 எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ரிவர்ஸ்-வயர் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
விவோ ஒய்17 எஸ் ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு இல்லை. அதாவது இது ஒரு 4ஜி போன் ஆகும். அதாவது 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், எப்எம் ரேடியோ, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஒய்17 எஸ் ஸமார்ட்போன்.

கைரேகை ஸ்கேனர் வசதி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு ஐபி54 (IP54) ரேட்டிங் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய விவோ ஒய்17 எஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் அருமையாக கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
அதேபோல் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்17 எஸ் போனை ரூ.11,499 விலையில் வாங்க முடியும். பின்பு இதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை ரூ.12,499 விலையில் வாங்க முடியும். குறிப்பாக கிளிட்டர் பர்பிள் (Glitter Purple) மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் ( Forest Green) நிறங்களில் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. மேலும் அமேசான், பிளிப்கார்ட், விவோ ஸ்டோர் உள்ளிட்ட தளங்களில் இந்த விவோ ஒய்17 எஸ் போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








