ஃபயரு டிஸ்கவுண்ட்.. ரூ.1500 கட்.. வெறும் ரூ.10999க்கு பக்கா போன்.. 1டிபி மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்ற விவோ ஒய்16 (Vivo Y16) மாடலுக்கு அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. அதோடு பிளிப்கார்ட் தளத்திலும் உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முழுதாக ரூ.1,500 தள்ளுபடியில் இந்த போனை வாங்கிக் கொள்ள முடியும்.
விவோ ஒய்16 அம்சங்கள் (Vivo Y16 Specifications): இந்த விவோ போன் 6.51 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். இதில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

இந்த போனில் ஆண்ட்ராய்டு 12 (Android 12) மற்றும் ஃபன்டச் 12 (Funtouch 12) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 (Octa Core Mediatek Helio P35) சிப்செட் வருகிறது. அதோடு ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 (IMG PowerVR GE8320) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவோ ஒய்16 போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. அதோடு 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (MicroSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் வருகிறது.
இந்த மாடலில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் (LED Flash) இடம் பெற்றுள்ளது.
இந்த கேமராவில் பனோராமா (Panorama), பேஸ் பியூட்டி (Face Beauty), டைம் லேப்ஸ் (Timelapse), ப்ரோ (Pro), டாக்குமெண்ட்ஸ் (Documents) போன்ற பல்வேறு மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த விவோ மாடலில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைப்-சி (Type-C) சார்ஜிங் போர்ட் வருகிறது.
இந்த விவோ ஒய்16 மாடல் ஸ்டெல்லர் பிளாக் (Stellar Black) மற்றும் ட்ரிஸ்லிங் கோல்டு (Drizzling Gold) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரை, 4ஜி எல்இடி (4G LTE), ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0), ஜிபிஎஸ் (GPS) மற்றும் வை-பை 802 (Wi-Fi 802) ஆகியவை வருகின்றன.
இந்த விவோ போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 12,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மிகவும் மலிவான விலையில் நல்ல நல்ல அம்சங்களை கொண்டிருந்ததால், விற்பனையில் சக்கைபோடு போட்டது.
இந்த விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக விவோ இந்தியா (Vivo India) நிறுவனம், ரூ.500 விலை குறைப்பு செய்துள்ளது. இதுபோக பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.1000 உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ரூ.1500 டிஸ்கவுண்ட்டில் இந்த விவோ ஒய்16 போனை பெற்றுக் கொள்ளலாம். ஆகவே, இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலை வெறும் ரூ.10,999க்கு வாங்கிக்கொள்ள முடியும்.
இந்த பிளிப்கார்ட் தள்ளுபடியை பெற அந்த போனை ஆர்டர் செய்யும் போது கோடக் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். அதேபோல இந்த கார்டுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ (No Cost EMI) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இவ்வளவு மலிவான விலையில், இந்த போன் கிடைப்பதால் விற்பனையில் மீண்டும் நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








