Home
Mobile

டூயல் ரியர் கேமராவுடன் இந்தியாவில் களமிறங்கும் Vivo Y16: காத்திருப்போம்.!

விவோ நிறுவனம் புதிய Vivo Y16 ஸ்மார்ட்போனை இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய விவோ போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

விவோ Y16

விவோ Y16

குறிப்பாக பட்ஜெட் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த விவோ Y16 போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த விவோ Y16 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

விவோ Y16 ஸ்மார்ட்போன் 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் உங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும். அதேபோல் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன்.

 மீடியாடெக் சிப்செட்

மீடியாடெக் சிப்செட்

விரைவில் அறிமுகமாகும் விவோ Y16 ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் பி35 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

புதிய விவோ Y16 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு வழங்கப்படும்.

13எம்பி பிரைமரி கேமரா

13எம்பி பிரைமரி கேமரா

இந்த விவோ Y16 ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த புதிய விவோ போன். இதுதவிர பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

விவோ Y16 ஸ்மார்ட்போனில் பெரிய பேட்டரி வசதி உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்த போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும். பின்பு 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ Y16ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0, வைஃபை, ஜிபிஎஸ், 4ஜி எல்டிஇ போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான விவோ போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விவோ Y16 ஸ்மார்ட்போன்  விலை

விவோ Y16 ஸ்மார்ட்போன் விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y16 ஸ்மார்ட்போன் ரூ.12,499-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Vivo Y16 smartphone to launch in India this weekend: Specs, Price and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X