விவோ Y15s ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! முழு விவரம்.!
விவோ நிறுவனம் விவோ Y15s ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட விவோ Y15s ஸ்மார்ட்போன் ரூ.10,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.10,490-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ Y15s ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.51-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது விவோ Y15s. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளதால் கேமிங், வீடியோ போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் என்றுதான் கூறவேண்டும்.

விவோ Y15s ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ Y15s ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ Y15s ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி ஏஐ ரியர் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் இரண்டுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீகேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள்மற்றும் எல்இடி பிளாஷ் உள்ளிட பல சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

விவோ Y15s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை சென்சார் உட்பட பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மைக்ரோ-USB போர்ட், 4G, புளூடூத் v5.0 மற்றும் Wi-Fi உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த அசத்தலான விவோ Y15s மாடல்.மிஸ்டிக் ப்ளூ மற்றும் வேவ் கிரீன் போன்ற நிறங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விவோ நிறுவனம் விரைவில் பல புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். அதாவது விரைவில் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் தொடர்ந்து பல நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன.


Click it and Unblock the Notifications