Home
Mobile

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ Y15s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சிங்கப்பூரில் விவோ Y15s ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் நீலம் மறறும் பச்சை நிறத்தில் இந்த அசத்தலான விவோ Y15s ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3ஜிபி ரேம் மற்

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட விவோ Y15s ஸ்மார்ட்போனின் விலை SGD 179 (இந்திய மதிப்பில் ரூ.9,800) ஆகஉள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு விபரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

து 6.51-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

விவோ Y15s ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.51-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது விவோ Y15s. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளதால் கேமிங், வீடியோ போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் என்றுதான் கூறவேண்டும். மேலும் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

 Y15s ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் ம

விவோ Y15s ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒருஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

13எம்பி ஏஐ ரியர் சென்சார்

விவோ Y15s ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி ஏஐ ரியர் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் இரண்டுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீகேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள்மற்றும் எல்இடி பிளாஷ் உள்ளிட பல சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

விவோ Y15s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

விவோ Y15s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை சென்சார் உட்பட பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விவோ Y15s

விவோ Y15s

மைக்ரோ-USB போர்ட், 4G, புளூடூத் v5.0 மற்றும் Wi-Fi உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த அசத்தலான விவோ Y15s மாடல். அதேபோல் விவோ நிறுவனம் விரைவில் பல புதிய ஸ்மார்ட்போன்களைஇந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். அதாவது விரைவில் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் தொடர்ந்து பல நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன.

விவோ Y76 5G

விவோ Y76 5G

மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த விவோ Y76 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 1,080x2,408 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் 460 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக்Dimensity 700 SoC சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு FunTouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

100 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது

விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் 4100 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 44W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் புளூடூத் வி5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ,யுஎஸ்பி ஒடிஜி, டூயல் சிம் ஆதரவு, கைரேகை சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-காம்பஸ் மற்றும் கைரோஸ்கோப் சென்சார் என பல சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 Y76 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரை

விவோ Y76 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக்கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Vivo Y15s Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X