விவோ Y15 மற்றும் விவோ Y17 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
விவோ நிறுவனம் தனது விவோ Y15 மற்றும் விவோ Y17 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி இந்த விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைதளங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y17 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை 17,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.14,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் விவோ Y15 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ Y15 டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.35-இன்ச் வாட்டர்டிராப் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1544 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. இக்கருவி ஆக்டோ-கோர் மீடியாடெக் பி22 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதள்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது

விவோ Y15 கேமரா:
விவோ Y15 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ-அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. விவோ வ்யை15 சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் உள்ளது.

விவோ Y17 டிஸ்பிளே
விவோ Y17 ஸ்மார்ட்போன் மாடல் 6.35-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1544x720 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12என்.எம் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஃபன்டச் ஒ.எஸ் 9சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ Y17 கேமரா
விவோ Y17 சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல். விவோ வ்யை17 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications