மலிவு விலையில் நல்ல போன் வேணுமா? அப்போ Vivo Y12s போன் தான் உங்களுக்கு ரைட் சாய்ஸ்..
விவோ நிறுவனம் சமீபத்தில் விவோ ஒய் 51 ஏ என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து நிறுவனம் தற்பொழுது, விவோ ஒய் 12 எஸ் (Vivo Y12s)எனப்படும் புதிய ஒய்-சீரிஸ் நுழைவு நிலை ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழு சிறப்பம்ச விபரங்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

Vivo Y12s ஸ்மார்ட்போன்
இந்த புதிய சாதனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட விவோ ஒய் 12 ஸ்மார்ட்போனின் வாரிசு பதிப்பாகும். இருப்பினும், விவோ ஒய் 12 ஸ்மார்ட்போன் மாடலை விட, Vivo Y12s ஸ்மார்ட்போனில் பெரிய டிஸ்பிளே மற்றும் வித்தியாசமான சிப்செட்டு வழங்கப்பட்டுள்ளது. விவோ ஒய் 12 எஸ் ஸ்மார்ட்போனின் மற்ற முக்கிய அம்சங்களைப் பற்றிப் பார்க்கையில் இது 5,000 எம்ஏஎச் பேட்டரி, இரட்டை-பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது.

Vivo Y12s ஸ்மார்ட்போன் விலை
புதிய Vivo Y12s ஸ்மார்ட்போன் இந்தியாவில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக ரூ. 9,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவோ ஆன்லைன் ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம், டாடா க்ளிக் மற்றும் சில்லறை கடைகளில் பாண்டம் பிளாக் மற்றும் க்ளாஸியர் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. பஜாஜ் பின்சர்வ், ஹோம் கிரெடிட், ஐடிஎஃப்சி ஆகிய வங்கிகளுக்கு வெளியீட்டு சலுகையும் உண்டு.

Vivo Y12s சிறப்பம்சம்
- 6.51' இன்ச் 720 x 1,600 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 35 சிப்செட்
- 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை ஸ்டோரேஜ்
- அண்ட்ராய்டு 10 இல் ஃபன்டூச் ஓஎஸ் 11 இயங்குதளம்
- டூயல் பின்புற கேமரா அமைப்பு
- 13 எம்பி முதன்மை சென்சார்
- 2 எம்பி ஆழ சென்சார்
- 8 எம்பி செல்பி கேமரா
- 4 ஜி எல்டிஇ
- வைஃபை
- புளூடூத் 5.0
- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
- எஃப்எம் ரேடியோ
- மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்
- 10W சார்ஜிங் ஆதரவு
- 5,000 mAh பேட்டரி



Click it and Unblock the Notifications