அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன்.!
விவோ நிறுவனம் ஏற்கனவே விவோ Y12s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள நிலையில், மீண்டும் விவோ Y12s 2021 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்சமயம் இந்த விவோ Y12s 2021 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

அதன்படி விவோ Y12s 2021 மாடல் ஆனது எச்டி பிளஸ் டிஸ்பிளே 720 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் 3ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன்.
இந்த புதிய விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் உடன் அட்ரினோ 505 ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட விவோ Y12s சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விவோ Y12s ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் FuntouchOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

விவோ Y12s ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செய்கை நுண்ணறிவு அம்சம் எனப் பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ Y12s சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் Phantom Black மற்றும் Glacier Blue நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். குறிப்பாக ஃபேஸ் அன்லாக், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
விவோ Y12s சாதனத்தில் 4ஜி வோல்ட்இ, 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications