Home
Mobile

பட்ஜெட் விலையில் விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன் மாடலை வியட்நாம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு
720 x 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த1.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் FuntouchOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ர்ட்போனில் 3ஜிபி ரேம்

விவோ Y12s 2021 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 13எம்பி பிரைமரி கேமரா

13எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் எனப் பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

விவோ Y12s 2021 சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக ஃபேஸ் அன்லாக், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ல் 4ஜி வோல்ட்இ, 2.4

விவோ Y12s 2021 சாதனத்தில் 4ஜி வோல்ட்இ, 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

உள்ளடக்க மெமரி

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை கொண்ட விவோ Y12s 2021 ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.10,445-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo Y12s 2021 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X