ரூ.11,800 போதும்.. டூயல் கேமரா.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது புதிய Vivo போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய விவோ ஸ்மார்ட்போனை சத்தமின்றி அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம்.
அதாவது விவோ நிறுவனம் விவோ ஒய்12 (Vivo Y12) எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். குறிப்பாக இந்த போன் சீனாவில் மட்டுமே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விவோ ஒய்12 மாடல் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்12 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 720 x 1612 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
விவோ ஒய்12 ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் (MediaTek Helio G85 chip) வசதி உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிகளுக்கு இந்த போன் அருமையாகப் பயன்படும். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
Origin OS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஒய்27எஸ் ஸமார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் விவோ ஒய்12 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு (microSD card) ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது விவோ ஒய்12 போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் விவோ ஒய்12 போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ( 15W wired fast charging), கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
இதுதவிர 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ ஒய்12 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 186 கிராம் ஆகும். அதேபோல் வைல்ட் கிரீன் மற்றும் கிரிஸ்டல் பர்பிள் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவோ ஒய்12 போனின் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.11,800) ஆகும்.


Click it and Unblock the Notifications








