விவோ Y11 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ லு11ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டூச் ஓஎஸ் அப்டேட்-ஐ வெளியிட்டுள்ளது. கண்டிப்பாக இந்த அப்டேட் பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். இந்த ஸ்மார்ட்போன் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது.

PiunikaWeb வெளியிட்ட தகவல்படி, விவோ Y11 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் Vivo rev 6.8.25 என்ற எண்ணுடன் வருகிறது. இது சுமார் 2.9ஜிபி அளவு கொண்டது ஆகும். மேலும் சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு அப்டேட்.

விவோ Y11 ஸ்மார்ட்போன் மாடல் 6.35-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1544 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்த்தபடி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் அட்ரினோ 505ஜிபியு வசதியுடன் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதள ஆதரவுடன் வெளிவந்தது. தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது.

இந்த விவோ Y11 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ Y11 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிவப்பு, கருப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications