பட்ஜெட் விலையில் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ Y11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் இந்தியாவில் ரூ.8, 990-விலையில் விவோ Y11 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சில ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துவிட்டது. அமேசான் உள்ளிட்ட
சில ஆன்லைன் தளங்களில் நாளை முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போனை தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் குறிப்பிட்ட சலுகை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இஎம்ஐ உள்ளிட்ட குறிப்பிட்ட சலுகைகள் ஆன்லைனில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ Y11 டிஸ்பிளே
விவோ Y11 ஸ்மார்ட்போன் மாடல் 6.35-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1544 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்த்தபடி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் அட்ரினோ 505ஜிபியு வசதியுடன் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதள ஆதரவுடன்வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா அமைப்பு
விவோ Y11 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி செகன்டரி லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.

சேமிப்பு வசதி
இந்த விவோ Y11 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
விவோ Y11 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிவப்பு, கருப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications