பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. 6500mAh பேட்டரி.. IP65 ரேட்டிங்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனத்தின் விவோ ஒய்11 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6500எம்ஏஎச் பேட்டரி, 13எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்11 5ஜி போனுக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ ஒய்11 5ஜி அம்சங்கள் (Vivo Y11 5G Specifications): தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (octa core MediaTek Dimensity 6300 chipset) உடன் இந்த விவோ ஒய்11 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் விவோ ஒய்11 5ஜி ஸ்மார்ட்போன் 6.74-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate),1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ ஒய்11 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் IP65 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (ip65 dust and splash resistance) உடன் விவோ ஒய்11 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர SGS மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
விவோ ஒய்11 5ஜி ஸ்மார்ட்போன் 13எம்பி ரியர் கேமரா உடன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ், நைட், போர்ட்ரெய்ட், ப்ரோ, டைம்-லேப்ஸ் மற்றும் லைவ் போட்டோ மோட் போன்ற பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
விவோ ஒய்11 5ஜி ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
மேலும் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) ஆதரவும் இந்த விவோ போனில் உள்ளது.


Click it and Unblock the Notifications