இதான்பா பட்ஜெட்.. ரூ.16,685 போதும்.. 120W சார்ஜிங்.. OIS கேமரா.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த போன்?
வெறும் ரூ.17,000 பட்ஜெட்டில் 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, ஓம்னிவிஷன் கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் அம்சங்களுடன் விவோ ஒய்100டி (Vivo Y100t) 5ஜி போன் விற்பனைக்கு வர இருக்கிறது.
விவோ ஒய்100டி அம்சங்கள் (Vivo Y100t Specifications): இந்த விவோ போனில் 6.64 இன்ச் (2388 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவானது, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 3 (OriginOS 3) வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8200 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி610 எம்சி6 ஜிபியு (Mali G610 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.
இந்த விவோ மாடலில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 64 எம்பி மெயின் கேமராவானது, ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்சானஜி சப்போர்ட்டுடன் வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா இடம் பெற்றுள்ளது.
16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 8 ஜிபி ரேம் (8ஜிபி டைனாமிக் ரேம்) + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. இந்த விவோ ஒய்100டி போனானது, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது.
பட்ஜெட்டிலும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் சப்போர்ட் உள்ளது. இந்த பேட்டரியோடு 200 கிராம் எடை கொண்டுள்ளது. அதேபோல 8.79 மிமீ தடிமன் வருகிறது.
இந்த விவோ ஒய்100டி மாடலானது, 5ஜி சப்போர்ட் கொண்டுள்ளது. ஆகவே, 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் வருகிறது. அதோடு வை-பை 6 802 (Wi-Fi 6 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.
இந்த போனில் மவுண்டன் கிரீன் (Mountain Green), ஸ்னோ ஒயிட் (Snowy White) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய 3 கலர்கள் வருகின்றன. இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,685ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,990ஆகவும் இருக்கிறது.
அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,675ஆகவும் இருக்கிறது. இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. வரும் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அதன்பிறகு இந்தியா உள்பட அடுத்தடுத்த நாடுகள் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications