வாரி தூக்கும் பட்ஜெட்.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. 512GB மெமரி.. புதிய விவோ போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது விவோ ஒய்100ஐ ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. குறப்பாகஇந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது டூயல் கேமரா, டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது.
குறிப்பாக இந்த விவோ ஒய்100ஐ ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது விவோ ஒய்100ஐ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ ஒய்100ஐ அம்சங்கள் vivo Y100i specifications: 6.64-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி (Full HD+ LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த விவோ ஒய்100ஐ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 2388 × 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளெ உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Dimensity 6020 7nm processor) உடன் இந்த அசத்தலான விவோ ஒய்100ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு OriginOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் விவோ ஒய்100ஐ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ ஒய்100ஐ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது. குறிப்பாக யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த விவோ ஒய்100ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இதில் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியும் உள்ளது. எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. புளூடூத் 5.1,5ஜி, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
ப்ளூ, பிங்க் மற்றும் பிளாக் நிறங்களில் இந்த விவோ ஒய்100ஐ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ ஒய்100ஐ ஸ்மார்ட்போனின் விலை 1599 யுவான் (1599 yuan) (இந்திய மதிப்பில் ரூ.18,300) ஆகும். தற்போது சீனாவில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications