யாரு சாமி அவன்.. ரூ.24,460 பட்ஜெட்ல 24GB ரேம்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த போன்?
மார்கெட் அதிரும்படியான பட்ஜெட்டில் 24 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, ஓஐஎஸ் கேமரா, 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் விவோ ஒய்100ஐ பவர் (Vivo Y100i Power) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவரம் இதோ.
விவோ ஒய்100ஐ பவர் அம்சங்கள் (Vivo Y100i Power Specifications): இந்த விவோ போனில் 6.64 இன்ச் (1080 x 2388 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) பச்ஞ்-ஹோல் டிஸ்பிளே (Punch-hole Display) மாடலாகும்.

இந்த பவர் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 3 (Origin OS 3) வருகிறது. அதோடு ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 மொபைல் (Octa Core Snapdragon 6 Gen 1 Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த விவோ ஒய்100ஐ பவர் போனில் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 12 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது. மேலும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் வருகிறது. ஆகவே, எஸ்டி கார்டு சிலாட் இடம் பெற்றுள்ளது.
இந்த போனில் எல்இடி பிளாஷ் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. இந்த கேமராவில் 10X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் வருகிறது.
அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த கேமராவில் 2X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் வருகிறது. அதோடு நைட் சீன் (Night Scene), போர்ட்ராய்டு (Portrait), ப்ரொபஷனல் மோட் (Professional Mode), மைக்ரோ மூவி (Micro Movie) மற்றும் சூப்பர் மூன் (Super Moon) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன.
சைடு-பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-facing Fingerprint Scanner) கொண்டுள்ளது. இந்த விவோ ஒய்100ஐ பவர் போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 6,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

அதோடு லிக்விட் கூலிங் ஹீட் பைப் (Liquid Cooling Heat Pipe) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) வருகின்றன. இந்த போன் 199.6 கிராம் எடை கொண்டுள்ளது.
அதேபோல 9.1 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. இந்த விவோ ஒய்100ஐ பவர் போனில் பிளாக் (Black), வைட் (White) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை வெறும் ரூ.24,460ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவோ ஒய்100ஐ பவர் போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.25,000 பட்ஜெட்டில் 24 ஜிபி ரேம், 6,000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் வருவதால், நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விவோ ஒய்100ஐ போன் வெளியாகிவிட்டது. பவர் மாடலை விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








