Home
Mobile

நச்சுனு விவோ.. ரூ.18,000 போதும்.. 12GB ரேம்.. 44W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய விவோ பிரியர்களை வெயிட்டிங் மோடில் போடும்படி 12ஜிபி ரேம், ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் விவோ ஒய்100ஐ (Vivo Y100i) 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

விவோ ஒய்100ஐ அம்சங்கள் (Vivo Y100i Specifications): இந்த விவோ போனில் 6.64 இன்ச் (2388 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்டுள்ளது.

ரூ.18,000 போதும்.. 12GB ரேம்.. 44W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி போன்!

அதோடு மீடியாடெக் டைமன்சிட்டி 6020 எஸ்ஓசி ( MediaTek Dimensity 6020 SoC) சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் டூயல் ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமராவானது, 2 எம்பி ஏஐ கேமராவோடு வருகிறது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது.

இந்த விவோ ஒய்100ஐ போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போன் 190 கிராம் எடைக் கொண்டுள்ளது. 12 ஜிபி வரை ரேம் சப்போர்ட் வருகிறது. ப்ளூ மற்றும் பிங்க் கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் மற்ற அம்சங்கள் விவோ ஒய்100 போனை போலவே இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, அதன் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

விவோ ஒய்100 அம்சங்கள் (Vivo Y100 Specifications): இந்த போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி ஆகிய 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. ஓர்ஜின் ஓஎஸ் 3 (OriginOS 3) கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.18,000 போதும்.. 12GB ரேம்.. 44W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி போன்!

டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) இடம் பெற்றுள்ளது. அதோடு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விவோ ஒய்100ஐ மாடலில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த விவோ ஒய்100 போனில் 5ஜி எஸ்ஏ (SA) மற்றும் என்எஸ்ஏ (NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ ( Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS) மற்றும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போன்ற கனெக்விட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இப்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் விவோ ஒய்100ஐ போனின் விலை ரூ.18,319ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 28ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.

ரூ.18,000 போதும்.. 12GB ரேம்.. 44W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி போன்!

இதே விலையில் மற்ற நாடுகளிலும் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் இந்த போன் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. கம்மியான பட்ஜெட்டில் நல்ல பேட்டரி, சிப்செட் மற்றும் டிசைன் கொண்ட போன் வேண்டும் என்றால், இந்த விவோ ஒய்100ஐ மாடலை தேர்வு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Vivo Y100i 5G With 12GB RAM, Dimensity 6020 Launched in China Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X