பொசுக்குனு ரூ.4000 கட்.. ரூ.19,999 க்கு 16GB ரேம்.. 64MP கேமரா.. 44W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
16ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட் அமோலெட் டிஸ்பிளே, 64 எம்பி கேமரா, 44W ஃபிளாஷ் சார்ஜ், 4500mAh போன்ற பக்காவான அம்சங்களுடன் கலர் மாறக்கூடிய பேக் பேனல் டிசைன் கொண்ட விவோ ஓய்100 (Vivo Y100) போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
விவோ ஓய்100 அம்சங்கள் (Vivo Y100 Specifications): இந்த விவோ போன் 6.38 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (Full HD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் (HDR 10+) மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது. அதோடு டிசிபி-பி3 (DCI-P3) கலர் காமட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 900 6என்எம் (Octa Core MediaTek Dimensity 900 6nm) சிப்செட் வருகிறது. அதோடு மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali - G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவோ போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபி மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஹைபிரிட் டூயல் நானோ சிம் (Hybrid Dual Nano SIM) மற்றும் மைக்ரோஎஸ்டி சிலாட் வருகிறது.
இந்த போன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதோடு 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த போன் மெட்டல் பிளாக் (Metal Black), ட்விலைட் கோல்டு (Twilight Gold) மற்றும் பசிபிக் ப்ளூ (Pacific Blue) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் பேக் பேனலானது, கலர் சேஞ்சிங் ப்ளோவ்ரைட் ஏஜி கிளாஷ் டிசைன் (Color-Changing Flourite AG Glass Design) கொண்டுள்ளது.
ஆகவே, சூரிய ஓளி (Sunlight) மற்றும் ஆர்டிபிசியல் யுவி ரேய்ஸ் (Artificial UV Rays) அந்த பேனலில் படும்போது, அதன் கலர் மாறுபடும். இந்த போனில் 44W ஃபிளாஷ்சார்ஜ் (FlashCharge) சப்போர்ட் கொண்ட 4500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில் 60 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
இதற்கு டைப்-சி (Type-C) சார்ஜிங் போர்ட் வருகிறது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor), 5ஜி என்எஸ்ஏ (5G NSA), டூயல் 4ஜி வோஎல்இடி (Dual 4G VoLTE) ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை-பை (Wi-Fi 802) போன்ற அம்சங்கள் வருகின்றன.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது அதிரடியாக ரூ.2000 விலை குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரூ.2000 உடனடி கேஷ் பேக் (Instant Cash back) வழங்கப்படுகிறது. இது இஎம்ஐ (EMI) ஆர்டர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த கேஷ் பேக், ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஒன்கார்டு, பெடரல் போன்ற வங்கிகளில் கிரெடிட் கார்டுகளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை ரூ.4000 தள்ளுபடி போக வெறும் 19,999க்கு வாங்கிக்கொள்ள முடியும். இதேபோல விவோ ஓய்100ஏ (Vivo Y100A) போனுக்கும் ரூ.2000 விலை குறைப்பு மற்றும் கேஷ் பேக் வழங்கப்படுகிறது. விவோ ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








