50எம்பி செல்பி கேமரா கொண்ட புதிய 5G போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! முழு விவரம்.!
விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ Y100 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ட்விட்டர் பக்கத்தில் இந்த போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும்.
300 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவு
மேலும் ஆன்லைனில் கசிந்த விவோ Y100 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவரும்.

இந்த விவோ Y100 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த சிப்செட் உதவுடன் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் FuntouchOS UI சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
ட்ரிபிள் ரியர் கேமரா
விவோ Y100 ஸ்மார்ட்போன் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த விவோ போன்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன்.
பாஸ்ட் சார்ஜிங் வசதி
இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ Y100 ஸ்மார்ட்போன்.

குறிப்பாக விவோ Y100 ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன்.
என்ன விலை?
ரோஸ் கோல்ட் மற்றும் ப்ளூ நிறங்களில் இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்தியாவில் ரூ.27,000-க்கு கீழ் விவோ Y100 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய விவோ போன்.

அதேபோல் விவோ நிறுவனம் இந்த ஆண்டு பட்ஜெட் விலையில் பல 5ஜி போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் 5ஜி போன்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தான் பல்வேறு நிறுவனங்கள் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன.


Click it and Unblock the Notifications