Vivo சைலெண்டாக அறிமுகம் செய்த Vivo Y100 போன்.! வேற எந்த போன்லையும் இப்படி ஒன்னு இல்லை.!
விவோ (Vivo) நிறுவனம், அதன் ஸ்மார்ட்போன் பட்டியலில் புதிதாக Vivo Y100 என்ற சாதனத்தை அறிமுகம் செய்யவிருப்பதாக, கடந்த சில வாரங்களாக டீஸ் செய்து வந்தது. இந்த ஸ்மார்ட்போனை விவோ ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
காரணம், இது ரூ.20,000 முதல் ரூ. 30,000 விலைக்குள் கிடைக்கும் பட்ஜெட் மிட் ரேஞ் பிரிவில் வர இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இந்த போனின் ஸ்பெஷாலிட்டி என்று நிறுவனம் இதன் கலர் சேஞ்சிங் அம்சத்தையும் டீஸ் செய்திருந்தது. கலர் மாறும் மேஜிக் போனாக Vivo Y100 ஸ்மார்ட்போன் டிவைஸ் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

Vivo Y100 ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் துவங்கிவிட்டதா?
இதன் அறிமுகத்திற்காகக் காத்திருந்த நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இனி நீங்கள் வெய்ட் செய்ய வேண்டியதில்லை. விவோ நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, Vivo Y100 ஸ்மார்ட்போனின் விற்பனை இரவோடு இரவாக சைலெண்டாக துவங்கிவிட்டது மக்களே. சமீபத்தில் வெளியான ஒரு ஆப்லைன் ஷோரூம் தகவலின் படி, புதிய Vivo Y100 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துவிட்டது.
Vivo Y100 ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவின் பல ஆப்லைன் ஸ்டோர்ஸ் வழியாக வாங்கக் கிடைக்கிறது. மிரட்டலான தொடரத்துடன், இரண்டு கண்கவர் வண்ணங்களின் இந்த Vivo Y100 ஸ்மார்ட்போன் இப்போது வாங்கக் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

Vivo Y100 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்
- 6.38' இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே
- 90Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 1300 nits பீக் பிரைட்னஸ்
- 6,00,000: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ
- வாட்டர் டிராப் நாட்ச்
- ஆக்டா-கோர் MediaTek Dimensity 900 சிப்செட்
- 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ்
- 8ஜிபி அடிஷனல் ரேம் வசதி
- ஆண்ட்ராய்டு 13 உடன் FunTouchOS 13
- டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பு
- 64MP பிரைமரி கேமரா + 2MP பொக்கே + 2MP சூப்பர் மேக்ரோ லென்ஸ்
- 16MP முன்பக்க செல்ஃபி ஷூட்டர்
- 44W பிளாஷ் சார்ஜ்
- 4500mAh பேட்டரி
- டிவிலைட் கோல்டு (Twilight Gold) மற்றும் பசிபிக் ப்ளூ (Pacific Blue) நிறம்
Vivo Y100 ஸ்மார்ட்போனின் விலை பற்றிப் பேசுகையில், இந்த சாதனம் இப்போது இந்தியாவில் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ. 24,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது ஆஃப்லைன் கடைகளில் இருந்து வாங்குவதற்குக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், Vivo Y75 கையிருப்பு இல்லாத மாநிலங்களில் Vivo Y100 இப்போது வாங்குவதற்குக் கிடைக்கிறது என்று சமீபத்திய தகவல் குறிப்பிடுகிறது.

எந்த போனிலும் இல்லாத ஒன்னு இதுல இருக்கு.. அது என்ன தெரியுமா?
இந்த ஸ்மார்ட்போனில் உள்ள ஸ்பெக்ஸ் வைத்துப் பார்க்கையில், விவோ பிராண்ட்டை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த Vivo Y100 ஸ்மார்ட்போன் ஒரு ஸ்பெஷல் போனாக தான் திகழப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. இதன் 8ஜிபி அடிஷனல் ரேம் அம்சம் மற்றும் கலர் சேஞ்சிங் அம்சம் மட்டும் நம்மைச் சற்று கவர்ந்திழுக்கிறது. இந்த விலையில் உங்களுக்கு 16ஜிபி (8ஜிபி + 8ஜிபி) ரேம் கிடைப்பது உண்மையில் சிறப்பான விஷயம் தான்.
அதிக ரேம் கொண்ட டிவைஸ் மற்றும் ஸ்மூத் ஸ்மார்ட்போன் அனுபவத்தை அதிக செலவின்றி அனுபவிக்க விரும்பும் மக்களுக்கு Vivo Y100 பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








