தூக்கல் பட்ஜெட்.. ரூ.16065 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 44W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
மிகவும் கம்மியான பட்ஜெட்டில் 16 ஜிபி ரேம், கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் அம்சங்களுடன் விவோ ஓய்100 5ஜி (Vivo Y100 5G) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
விவோ ஓய்100 5ஜி அம்சங்கள் (Vivo Y100 5G Specifications): இந்த விவோ மாடல் 6.78 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) ஃபுல் எச்டிபிளஸ் (Full HD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு கர்வ்ட் எட்ஜ் டிஸ்பிளே (Curved-edge Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு டிசிஐ-பி3 (DCI-P3) மற்றும் என்டிஎஸ்சி கலர் காமட் (NTSC Color Gamut) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த விவோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் மொபைல் (Octa Core Snapdragon 695 8nm Mobile) சிப்செட் வருகிறது.
அதோடு ஓர்ஜின்ஓஎஸ் 3 (OriginOS 3) மற்றும் அட்ரினோ 619எல் ஜிபியு (Adreno 619L GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த விவோ போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்களும் இருக்கிறது. இந்த மாடலில் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய டூயல் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, ஓம்னிவிஷன் ஓவி64பி (OmniVision OV64B) சென்சார் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதோடு 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமரா மாடல் போனாகும். அதே போல 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த விவோ ஓய்100 போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
இந்த விவோ மாடலில் IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், 5ஜி எஸ்ஏ/ என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802) ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) வருகிறது.
இந்த போனானது, ப்ளூ (Blue), கிரீன் (Green) மற்றும் பிளாக் (Black) ஆகிய 3 மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,065ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.18,360ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.20,465ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மாடலின் விலை ரூ.22,740ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விவோ ஓய்100 5ஜி போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








