புதிய Vivo 5ஜி போனின் விற்பனை தேதி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.!
விவோ நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. மற்ற நிறுவனங்களை விட விவோ நிறுவனம் சற்று உயர்வான விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தாலும், அதற்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது விற்பனை?
இந்நிலையில் விவோ நிறுவனம் இந்தியாவில் Vivo Y100 5G எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த வாரம் இறுதியில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்றும், இதன் முதல் விற்பனை வரும் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய விவோ போன்.

என்னென்ன அம்சங்கள்?
இப்போது இணையத்தில் வெளியான விவோ Y100 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். விவோ Y100 5ஜி ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த 5ஜி போன் வெளிவரும்.
விவோ Y100 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த சிப்செட் உதவியுடன் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் FuntouchOS UI சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன்.
இந்தியாவில் தற்போது 5ஜி சேவையை மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். குறிப்பாக 5ஜி சேவைக்குத் தகுந்தபடி இந்த விவோ Y100 போன் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போனில் 5ஜி ஆதரவு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விவோ Y100 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ Y100 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

என்ன விலை?
வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன். இணையத்தில் வெளியான தகவலின்படி ரூ.27,000 அல்லது ரூ.29,000-விலையில் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








