வெச்சி செஞ்ச விவோ.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. பொக்கெ கேமரா.. 80W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?
அமோலெட் டிஸ்பிளே, பொக்கெ கேமரா, 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, 80W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் கலர் சேஞ்சிங் ப்ளூரைட் ஏஜி கிளாஸ் கொண்ட விவோ ஒய்100 4ஜி (Vivo Y100 4G) போன் பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது.
விவோ ஒய்100 4ஜி அம்சங்கள் (Vivo Y100 4G Specifications): இந்த விவோவில் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஈ4 அமோலெட் (E4 AMOLED) டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் டிசிஐ பி3 (DCI-P3) கலர் காமட் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

50 எம்பி எச்டி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா + ஃபிளிக்கர் சென்சார் (Flicker Sensor) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. பொக்கெ ஃபிளார் போர்ட்ராய்டு (Bokeh Flare Portrait) மற்றும் அல்ட்ரா எச்டி இமேஜிங் சிஸ்டம் (Ultra HD Imaging System) வருகிறது.
டூயல் வியூ வீடியோ (Dual-View Video), ஸ்டைலிஷ் நைட் ஃபில்டர்கள் (Stylish Night Filters) வருகின்றன. 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஷூட்டரில் நைட் (Night), போர்ட்ராய்டு (Portrait), டூயல் வியூ (Dual View), லைவ் போட்டோ (Live Photo), போன்ற பீச்சர்கள் வருகின்றன. ஆகவே, கேமரா குவாலிட்டி பிரீமியம் போர்ட்ராய்டு அவுட்புட் கொடுக்கும்.
இந்த விவோ ஒய்100 4ஜி போனில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சிலாட் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 685 6என்எம் (Octa Core Snapdragon 685 6nm) சிப்செட் கொண்டிருக்கிறது.

லேட்டஸ்ட் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. இந்த விவோ ஒய்100 4ஜி போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) வருகிறது.
டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speaker) வருகின்றன. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த விவோ ஒய்100 4ஜி போனானது, 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்விட்டி பீச்சர்கள் வருகின்றன.
இந்த விவோ மாடலில் கிரிஸ்டல் பிளாக் (Crystal Black) மற்றும் பிரீஸ் க்ரீன் (Breeze Green) ஆகிய 2 கலர்கள் வருகின்றன. இப்போது, குளோபல் வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த போனுக்கு ரூ.20,864ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








