பத்திக்கிச்சு ரூ.10K பட்ஜெட்.. 5050mAh பேட்டரி, Android 16 ஓஎஸ், 4GB ரேம் உடன் புது VIVO போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனமானது, அதன் ஒய்-சீரீஸின் கீழ், 8000mAh பேட்டரி + 4ஜி சப்போர்ட் காம்பினேஷனில் ஒரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் வெளியாகி இருந்தது. அது விவோ ஒய்500 4ஜி (Vivo Y500 4G) மாடல் ஆகும். இதற்கிடையில் இன்னொரு ஒய் சீரீஸ் ஸ்மார்ட்போனும் விரைவில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.
அது விவோ ஒய்05இ (Vivo Y05e) ஸ்மார்ட்போன் ஆகும். இது தாய்லாந்தின் என்பிடிசி (NBTC) என்கிற தேசிய ஒலிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையம் (National Broadcasting and Telecommunications Commission) சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. இது - இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் கூடிய விரைவில் நடக்கும் என்பதை குறிக்கிறது.

விவோ ஒய்05இ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம், என்ன விலைக்கு அறிமுகம் ஆகலாம்?
- 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அடிப்படையிலான ஆர்ஜின் ஓஎஸ் 6 இன்டர்பேஸ் (OriginOS 6)
- 5,050mAh பேட்டரி
- ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்
ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய விவோ ஒய்05இ மாடலானது விவோ ஒய்05 மாடலுக்கு கீழே நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் விவோ ஒய்05 4ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999 க்கு அறிமுகமானது. விவோ ஒய்05 ஸ்மார்ட்போன் ஆனது ஷாம்பெயின் கோல்ட் (Champagne Gold) மற்றும் மிட்நைட் ப்ளூ (Midnight Blue) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.
விவோ ஒய்05 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் எல்சிடி டிஸ்பிளே
- யுனிசாக் டி7225 சிப்செட் (Unisoc T7225)
- 8-மெகாபிக்சல் ரியர் கேமரா
- 5-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங்
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ்
- 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,500mAh பேட்டரி
விவோ ஒய்500 4ஜி: இது கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ ஒய்500 5ஜி மாடலின் 4ஜி வேரியண்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிமுகத்தை விவோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த போன் கூகுள் பிளே கன்சோல் (Google Play Console) தளத்தில் இடம்பெற்றுள்ளது. இது விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதற்கான அறிகுறியாகவும் கருதப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, கூகுள் பிளே கன்சோல் லிஸ்டிங் வழியாக விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை இருப்பினும் டெக் அவுட்லுக் (Tech Outlook) ஆனது இந்த ஸ்மார்ட்போன் குறித்த சில முக்கிய விவரங்களை பகிர்ந்துள்ளது. போதாக்குறைக்கு இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் ஏற்கனவே அறிமுகமாகி விட்டதால், அதில் உள்ள முக்கிய அம்சங்களையும் நாம் இதில் எதிர்பார்க்கலாம்.
விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்?
- 1,260×2,800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 'பஞ்ச்-ஹோல்' (punch-hole) டிஸ்பிளே
- ஆக்டா-கோர் Spreadtrum UM9360 SoC (இது Unisoc T7300 சிப்செட் ஆக இருக்கலாம்
- 8GB RAM மற்றும் Android 16-ஐ அடிப்படையாக கொண்ட OriginOS 6 ஓஎஸ் உடன் வரலாம்
- 5ஜி மாடலில் உள்ளதை போன்ற 8,000mAh பேட்டரியையும் கொண்டிருக்கலாம்


Click it and Unblock the Notifications