அட்டகாசமான அம்சங்களுடன் அடிமாட்டு விலைக்கு வரும் புதிய Vivo 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மலேசியாவில் விவோ ஒய்05 (Vivo Y05) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
தற்போது டிப்ஸ்டர் Ahsan தெரிவித்தது என்னவென்றால் இந்த புதிய விவோ ஒய்05 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.12,999 விலையில் அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளார். இப்போது இந்த புதிய விவோ போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ ஒய்05 அம்சங்கள் (Vivo Y05 specifications): 6.74-இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. விவோ ஒய்05 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 × 720 பிக்சல்ஸ், 1200 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
தரமான யுனிசாக் டி7225 பிராசஸர் (Unisoc T7225 processor) கொண்டுள்ளது புதிய விவோ ஒய்05 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
அதேபோல் OriginOS 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளம் மூலம் புதிய விவோ ஒய்05 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் இதில் உள்ளது.
குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது விவோ ஒய்05 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
8எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது புதிய விவோ ஒய்05 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

அதுவும் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியும் விவோ ஒய்05 ஸ்மார்ட்போனில் உள்ளது. 4ஜி வோல்ட்இ, டூயல் சிம், வைஃபை, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
6500எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த புதிய விவோ ஒய்05 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த போனின் எடை 209 கிராம் ஆகும். இதுதவிர பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








