Home
Mobile

விவோ அறிமுகம் செய்த புதிய போன்.. 6500mAh பேட்டரி.. IP65 ரேட்டிங்.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்05 (Vivo Y05) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ ஒய்05 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ ஒய்05 அம்சங்கள் (Vivo Y05 specifications): 6.74-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் விவோ ஒய்05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 × 720 பிக்சல்ஸ், 1200 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ அறிமுகம் செய்த புதிய போன்.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

யுனிசாக் டி7225 பிராசஸர் (Unisoc T7225 processor) உடன் புதிய விவோ ஒய்05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

OriginOS 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய விவோ ஒய்05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் இதில் உள்ளது.

4ஜிபி ரேம் மற்றும 64ஜிபி மெமரி உடன் விவோ ஒய்05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

8எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது புதிய விவோ ஒய்05 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியும் விவோ ஒய்05 ஸ்மார்ட்போனில் உள்ளது. 4ஜி வோல்ட்இ, டூயல் சிம், வைஃபை, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகுள் இந்த போனில் உள்ளன. இதுதவிர பல
சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

6500எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த புதிய விவோ ஒய்05 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த போனின் எடை 209 கிராம் ஆகும்.

தற்போது விவோ ஒய்05 ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனின் விலை RM 399 (இந்திய மதிப்பில் ரூ.9,321) ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y05 launched in Malaysia : check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X