வெறும் ரூ.7,480 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 13எம்பி கேமரா.. அறிமுகமானது புது Vivo போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்04எஸ் (Vivo Y04s) ஸ்மார்ட்போனை தற்போது இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விவோ ஒய்04எஸ் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
விவோ ஒய்04எஸ் அம்சங்கள் (Vivo Y04s Specifications): 6.74-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ ஒய்04எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளேவில் 570 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1600×720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆக்டா-கோர் யுனிசாக் டி612 சிப் (octa-core Unisoc T612 chip) உடன் இந்த விவோ ஒய்04எஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
13எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் விவோ ஒய்04எஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் விவோ ஒய்04எஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் விவோ ஒய்04எஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விவோ போன் ஸ்மார்ட்போன் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் கொண்டுள்ளது. இதுதவிர பல்வேறு சென்சார் ஆதரவுகளுடன் இந்த புதிய விவோ ஒய்04எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6000mAh பேட்டரி வசதியுடன் விவோ ஒய்04எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W பிளாஷ் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ ஒய்04எஸ் போனில் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 202 கிராம் ஆகும். அதேபோல் இந்த புதிய விவோ போனின் விலை IDR 13,99,000 (இந்திய மதிப்பில் ரூ.7,480) ஆக உள்ளது. கிரிஸ்டல் பர்பிள் (Crystal Purple), ஜேட் கிரீன் (Jade Green)நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








