வெறும் ரூ.6,780 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. அறிமுகமானது விவோ போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது விவோ ஒய்03 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய விவோ போன் டூயல் ரியர் கேமரா, மீடியாடெக் சிப்செட், பெரிய டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ ஒய்03 அம்சங்கள் (Vivo Y03 specifications): 6.56-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. மேலும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ ஒய்03 ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்03 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் ஃபன்டச் ஒஸ் 14 (FunTouch OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
13எம்பி பிரைமரி லென்ஸ் + QVGA லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்03 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த விவோ ஒய்03 ஸ்மார்ட்போன்.
5000எம்ஏஎச் பேட்டரியைக் ( 5000mAh battery) கொண்டுள்ளது இந்த விவோ ஒய்03 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது விவோ ஒய்03 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

டூயல் சிம், 4ஜி வோல்ட்இ (4G VoLTE), டூயல்-பேண்ட் வைஃபை (dual-band Wi-Fi), புளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரகளுடன் விவோ ஒய்03 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட்(Dust & Splash Resistant) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன்.
விவோ ஒய்03 ஸ்மார்ட்போன் ஆனது தற்போது இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த விவோ ஒய்03 ஸ்மார்ட்போனின் விலை $83 (இந்திய மதிப்பில் ரூ.6,780)-ஆக உள்ளது. பச்சை (Green) மற்றும் கருப்பு ( Black) நிறத்தில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








