கம்மி விலையில் நீங்கள் எதிர்பார்த்த அம்சங்களுடன் அறிமுகமாகும் Vivo Y02s.!
சியோமி, ஒப்போ நிறுவனங்களுக்கு போட்டியாக விவோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக விவோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.

விவோ Y02s
இந்நிலையில் விவோ நிறுவனம் விரைவில் கம்மி விலையில் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்நிறுவனம் Vivo Y02s எனும் ஸ்மார்ட்போனை தான் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் நாம் எதிர்பார்க்கும் கம்மி விலையில் வெளிவரும்.

விவோ Y02s சிப்செட் எப்படி?
இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ Y02s ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம். விவோ Y02s ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக்
ஹீலியோ பி35 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும். இப்போது வரும் கம்மி விலை போன்களில் அதிகமாக இடம்பெறுவது இந்த
ஹீலியோ பி35 சிப்செட் தான்.
இந்த சிப்செட் உதவியுடன் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த புதிய விவோ Y02s போன் ஆண்ட்ராய்டு
12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கிள் ரியர் கேமரா
புதிய விவோ Y02s ஸ்மார்ட்போனில் சிங்கிள் ரியர் கேமரா உள்ளது. அதாவது எல்இடி பிளாஷ் ஆதரவுடன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். இதற்குபதிலாக 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா வசதி இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

விவோ Y02s ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

பெரிய டிஸ்பிளே
இந்த விவோ Y02s ஸ்மார்ட்போனில் 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 350 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சூப்பர் பேட்டரி
புதிய விவோ Y02s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5W Reverse சார்ஜிங் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

நிறங்கள்
விவோ Y02s ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு மற்றும் நீல நிறங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், புளுடூத் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய விவோ Y02s ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த விவோ Y77 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

விவோ Y77 5ஜி
விவோ Y77 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2408 பிக்சல், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய விவோ Y77 5ஜி போன்.

விவோ Y77 5ஜி சிப்செட்
விவோ Y77 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 930 சிப்செட் வசதி உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ Y77 5ஜி போன்.
மேலும் இந்த புதிய விவோ போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளதுஇந்த விவோ போன்.


Click it and Unblock the Notifications