ரூ.8000 விலையில் இப்படி ஒரு Vivo போன் கிடைக்கும் போது 30,000-திற்கு போன் எதற்கு? யோசிக்காம வாங்குங்க.!

|

பொதுவாக இன்றைய சூழ்நிலையில், ஒரு புது ஸ்மார்ட்போன் சாதனத்தை டீசெண்டான அம்சங்களுடன் வாங்க வேண்டும் என்றால் - குறைந்தது ரூ. 15,000 முதல் ரூ. 30,000 வரை தேவைப்படுகிறது. இது பலருக்கும் ஒரு சிக்கலாக இருக்கிறது, இருப்பினும் EMI போன்ற விருப்பங்களை கிளிக் செய்து.

மக்கள் அவர்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்கிக்கொள்கின்றனர். ஆனால், வெறும் ரூ.8,000 விலையில் உங்களுக்கு தேவையான அம்சங்களுடன் ஒரு போன் கிடைத்தால் வேண்டாமென்றா சொல்வீர்கள்.!

இந்தியாவிற்குள் வரும் புது Vivo Y02 ஸ்மார்ட்போன்

இந்தியாவிற்குள் வரும் புது Vivo Y02 ஸ்மார்ட்போன்

ஆம், சரியாகத் தான் படித்தீர்கள்; Vivo நிறுவனம் சமீபத்தில் இந்தோனேசியாவில் Vivo Y02 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது.

இந்த ஸ்மார்ட்போன் ஒரு பட்ஜெட் என்ட்ரி மாடலாகும். குறிப்பாக Vivo Y01 மாடலுக்கு அடுத்ததாக வருகிறது.

விவோ இந்த போனை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளியீட்டுத் தேதியை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

விவோ Y02 போனின் விலை, சலுகை மற்றும் சிறப்பம்ச விபரங்களை லீக் செய்த டிப்ஸ்டர்

விவோ Y02 போனின் விலை, சலுகை மற்றும் சிறப்பம்ச விபரங்களை லீக் செய்த டிப்ஸ்டர்

இருப்பினும், விவோ Y02 இந்த வார இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் டிப்ஸ்டர் பராஸ் குக்லானியிடம் இருந்து வந்துள்ளது; அவர் இந்தியாவில் வரவிருக்கும் விவோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள், விலை விபரங்கள் மற்றும் சலுகை விபரங்கள் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தோனேசியா மாடலை போலவே இந்திய மாடலும் ஒத்த அம்சங்களைக் கொண்டிருக்கும்.

உங்க போனை தொலைத்து விட்டீர்களா? கை தட்டி கண்டுபிடிக்கலாம்.! எப்படி தெரியுமா?உங்க போனை தொலைத்து விட்டீர்களா? கை தட்டி கண்டுபிடிக்கலாம்.! எப்படி தெரியுமா?

Vivo Y02 ஸ்மார்ட்போனின் விலை என்ன தெரியுமா?

Vivo Y02 ஸ்மார்ட்போனின் விலை என்ன தெரியுமா?

இந்தியாவில் Vivo Y02 ஸ்மார்ட்போனின் விலை 9,000 ரூபாய்க்குள் இருக்கும் என்றும் குக்லானி தெரிவித்தார். இருப்பினும், இது இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவு விலை ஸ்மார்ட்போன் மாடலாக மாறப்போகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த சாதனத்தின் சலுகை விலை ரூ. 8,449 என்ற விலை புள்ளியில் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரூ. 1,000 கேஷ்பேக் சலுகையுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

Vivo Y02 மொபைலில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்.!

Vivo Y02 மொபைலில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்.!

இந்த புதிய ஸ்மார்ட்போன் HD+ திறனுடன் இயங்கும் 6.51' இன்ச் ஹாலோ ஃபுல்வியூ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த சாதனம் 2.5டி யூனிபாடி டிசைனுடன் வரும் மற்றும் பிளாட் ஃப்ரேமுடன் இருக்கும். இந்த போன் பர்பிள் ஆர்க்கிட் ப்ளூ நிறத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது காஸ்மிக் கிரே நிறத்திலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

WhatsApp-ல் வந்த போட்டோ-வீடியோ டெலீட் ஆகிடுச்சா.! இனி இப்படி செஞ்சா உடனே ரிட்டர்ன் வந்துடும்.!WhatsApp-ல் வந்த போட்டோ-வீடியோ டெலீட் ஆகிடுச்சா.! இனி இப்படி செஞ்சா உடனே ரிட்டர்ன் வந்துடும்.!

மலிவு விலையில் இத்தனை டீசெண்டான அம்சங்கள்

மலிவு விலையில் இத்தனை டீசெண்டான அம்சங்கள்

விவோ Y02 ஆனது 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இந்த சாதனம் 8.49 மிமீ தடிமன் கொண்டது. இது பின்புறத்தில் ஒரு வட்ட கேமரா தொகுதியுடன் வரும்.

எல்இடி ப்ளாஷ் கொண்ட பின்புறத்தில் 8 எம்பி சிங்கிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஃபேஸ் பியூட்டி மற்றும் டைம் லேப்ஸ் ஆகியவை அடங்கும். விவோ Y02 நிலையான 60Hz ரெப்ரெஷ் ரேட் வீதத்துடன் வருகிறது.

எது 1TB வரை ஸ்டோரேஜா? உண்மையாவா?

எது 1TB வரை ஸ்டோரேஜா? உண்மையாவா?

இது 20:9 விகிதத்தைக் கொண்டிருக்கும். சாதனம் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் உடன் வரும். இந்தியாவில் இந்த போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியிடப்படும். இருப்பினும், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1TB வரை ஸ்டோரேஜை இது ஆதரிக்கும் என்பது சிறப்பானது. மலிவு விலையில் 1TB வரை ஸ்டோரேஜ் கிடைப்பது அரிதானது.

48,500 ஆண்டு பழமையான ஸோம்பி வைரஸ் கண்டுபிடிப்பு.! பதட்டத்தில் மக்கள்.! இது ஆபத்தானதா?48,500 ஆண்டு பழமையான ஸோம்பி வைரஸ் கண்டுபிடிப்பு.! பதட்டத்தில் மக்கள்.! இது ஆபத்தானதா?

30,000 ரூபாய் போன்களில் கிடைக்கும் 'அந்த' அம்சம்

30,000 ரூபாய் போன்களில் கிடைக்கும் 'அந்த' அம்சம்

விவோ Y02 செல்ஃபிக்களுக்காக, திரையின் மேற்புறத்தில் உள்ள வாட்டர் டிராப் நாட்ச் 5 எம்பி முன் கேமராவைக் கொண்டுள்ளது. விவோ Y02 ஆனது ஆண்ட்ராய்டு 12 (Go Edition) உடன் FunTouchOS 12 உடன் இயங்கும்.

30,000 ரூபாய் போன்களில் கிடைக்கும் அதே ஸ்டோரேஜ் வெறும் 8,000 ரூபாய்க்கு கிடைக்கும் போது ஏன் அதிகப் பணத்தைச் செலவு செய்ய வேண்டும்? இந்த போன் பற்றிய உங்கள் கருத்தைத் தெரியப்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
Vivo Y02 Budget Offering Smartphone Coming Soon To India At Rs 9000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X