Home
Mobile

5000 எம்ஏஎச் பேட்டரி, 8ஜிபி ரேம் உடன் விவோ ஒய் 30ஜி: விலை என்ன தெரியுமா?

விவோ ஒய் 30ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மீடியாடெக் ஹீலியோ பி65 எஸ்ஓசி செயலியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. விவோ ஒய் 30ஜி ஸ்மார்ட்போனானது 6.51 இன்ட் முழு எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் எல்சிடி பேனலைக் கொண்டிருக்கிறது. இது டூட்ராப் உச்சநிலை, 720 x 1600 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது.

புதுப்புது அம்சங்களோடு விவோ

புதுப்புது அம்சங்களோடு விவோ

விவோ நிறுவனம் புதுப்புது அம்சங்களோடு தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது விவோ ஒய் 30ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியா சிப்செட் 8ஜிபி ரேம் மற்றும் இரட்டை பின்புற கேமராக்கள் உடன் வருகிறது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு

விவோ ஒய்30ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்த வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.16,600 ஆக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது அப்சிடியன் பிளாக், டான் ஒயிட் மற்றும் அக்வா ப்ளூ ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது.

விவோ ஒய் 30ஜி விவரக்குறிப்புகள்

விவோ ஒய் 30ஜி விவரக்குறிப்புகள்

விவோ ஒய் 30ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், 6.51 இன்ச் எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் எல்சிடி பேனலைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது டியூ ட்ராப் உச்சநிலை மற்றும் 720x1600 பிக்சல்கள் தீர்மானம் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி65 சிப்செட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 1டிபி வரை விரிவாக்கக் கூடிய எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது.

கேமரா அம்சங்கள்

கேமரா அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் கேமரா என இரட்டை பின்புற செவ்வக வடிவ கேமராக்களை கொண்டிருக்கிறது. அதேபோல் இதில் 8 மெகாபிக்சல் முன்புற கேமரா செல்பி கேமரா வசதியை இது கொண்டிருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள் விவரங்களம்

பாதுகாப்பு அம்சங்கள் விவரங்களம்

விவோ ஒய் 30ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங் அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்திற்கு ஃபேஸ் அன்லாக் அம்சமும் இருக்கிறது. மேலும் கூடுதலாக பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள கைரேகை சென்சார் இருக்கிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை 4ஜி வோல்ட்இ, வைஃபை ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி 2.0 உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளது.

விவோ எக்ஸ்60, விவோ எக்ஸ்60 ப்ரோ, விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ்

விவோ எக்ஸ்60, விவோ எக்ஸ்60 ப்ரோ, விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ்

விவோ நிறுவனம் இந்தயாவில் புதிய விவோ எக்ஸ்60, விவோ எக்ஸ்60 ப்ரோ, விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், அசத்தலான கேமராக்கள் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள். விவோ எக்ஸ்60, விவோ எக்ஸ்60 ப்ரோ, விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y 30G Smartphone Announced With 5000 mAh Battery, 8GB RAM and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X