10ஜிபி ரேம் கொண்டு வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன், இதுதான்.!

|

ஸ்மார்ட்போன்களுக்கென உள்ள வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறும் புரட்சிமிக்க தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் விவோ நிறுவனம் ஏற்கனவே சந்தையில் பலவகையான ஸ்மார்ட்போன் பாணியினை உருவாக்கி உலவவிட்டுள்ளது

இந்நிலைப்பாட்டில் சமீபத்திய லீக்ஸ் தகவலொன்று புதுமையான அம்சங்களை உருவாக்கும் ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்றே முதன்மை நிறுவனங்களையே வாய்ப்பிக்காக்க வைக்கும் விடயமொன்றை வெளிப்படுத்தியுள்ளது

10ஜிபி ரேம் கொண்டு வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன், இதுதான்.!

அதாவது விவோ நிறுவனத்தின் வரவிருக்கும் முதன்மை தொலைபேசியானது 10 ஜிபி அளவிலான ரேம் மூலம் இயக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால், 10ஜிபி ரேம் கொண்டு வெளியாகும் உலகத்தின் முதல் ஸ்மார்ட்போனாக விவோ எக்ஸ்பிளே7 திகழும்.

4கே ஓஎல்இடி டிஸ்ப்ளே

4கே ஓஎல்இடி டிஸ்ப்ளே

10ஜிபி ரேம் மட்டுமின்றி கூறப்படும் விவோ எக்ஸ்பிளே7 ஆனது 4கே ஓஎல்இடி டிஸ்ப்ளேவும் கொண்டிருக்குமென இந்த சமீத்திய தகவல் வெளிப்படுத்தியுள்ளது. உடன் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி உடனான 512ஜிபி வரைஉள்ளடக்க சேமிப்பு கொண்டு இயக்கபப்டும்.

2018-ன் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இக்கருவி திகழும்

2018-ன் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இக்கருவி திகழும்

திரையின் கீழே ஒரு கைரேகை சென்சார் கொண்டுள்ள இக்கருவியானது இதற்கு முன்னரே விபோ தளத்தில் காணப்பட்டதும், இக்கருவியின் முன்னோடியான விவோ எக்ஸ்பிளே6 ஆனது கடந்த 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளியான அறிக்கைகள் உண்மையாகினால் 2018-ன் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இக்கருவி திகழுமென்பதில் ஐயமில்லை.

சினாப்டிக்ஸ் மூலம் சக்தியூட்டப்படும்

சினாப்டிக்ஸ் மூலம் சக்தியூட்டப்படும்

இதற்கு முன்னர் விவோ எக்ஸ்20 பிளஸ் யூடி ஸ்மார்ட்போன் ஆனது திரையின் கீழ் கைரேகை சென்சார் கொண்டு தொடங்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் என்று நிறுவனம் வெளிப்படுத்தப்பட்டதை இங்கு நினைவூட்ட விரும்புகிறோம். தற்போது வெளியாகியுள்ள லீக்ஸ் படங்களின்படி, எக்ஸ்பிளே7 ஆனது சினாப்டிக்ஸ் (Synaptics) மூலம் சக்தியூட்டப்படும் கைரேகை அங்கீகாரம் தொழில்நுட்பம் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும்.

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி

மேலும் இக்கருவி ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. அது சாத்தியமானால் விவோ எக்ஸ்பிளே6 ஸ்மார்ட்போனிற்கு பின்னர் க்வால்காம் எஸ்ஓசி கொண்டு வெளியாகும் முதல் விவோ ஸ்மார்ட்போனாக இது திகழுமென்பது குறிப்பிடத்தக்கது.

92.9 சதவிகிதம் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்

92.9 சதவிகிதம் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்

(கசிவுகளின் அடிப்படையில்) கேமராக்கள் பற்றி பேசுகையில், 4எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட ஒரு இரட்டை பின்புற கேமரா அமைப்பு இடம்பெறலாம். மேலும் இந்த தொலைபேசியானது 4கே ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம். அது 92.9 சதவிகிதம் என்கிற ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் கொண்டிருக்கலாம்.

ஆரம்ப விலை நிர்ணயம்

ஆரம்ப விலை நிர்ணயம்

25 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆகிய இரண்டு சேமிப்பு வகைகளில் விவோ எக்ஸ்பிளே7 வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரையிலாக இக்கருவியின் விலை மற்றும் கிடைக்கும்தன்மை சார்ந்த எந்த வார்த்தையும் கிடையாது. இருப்பினும் சுமார் 500 அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.31,800) என்கிற ஆரம்ப விலை நிர்ணயத்தை பெறலாம்.

Best Mobiles in India

English summary
Vivo Xplay7 Said to Be First Smartphone to Sport 10GB of RAM. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X