Home
Mobile

ஐபோன் எக்ஸ்-ஐ ஓரங்கட்டுங்கள்; வாய்ப்பிளக்க்க வைக்கும் விவோ எக்ஸ்ப்ளே 7-ஐ பாருங்கள்.!

கூறப்படும் அம்சங்களோ - ஐபோன் எக்ஸ் சாதனத்தை "போட்டுத்தள்ள ரெடியாக" களமிறங்கும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

By Muthuraj

சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு பின்னர் இந்தியாவில் அதிகம் "விசாரிக்கப்படும் மற்றும் பேசப்படும்" ஸ்மார்ட்போன்களாக திகழ்வது விவோ கருவிகள் தான். அதனை நன்கு அறிந்த விவோ நிறுவனம் தொடர்ச்சியான முறையில் அனைத்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

அந்த வரிசையில் சமீபத்தில் வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்றின் கீழ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் விவோ எக்ஸ்ப்ளே 7 என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஒரு பிரதான தொலைபேசியாக திகழுமென எதிர்பார்க்கப்படும் இக்கருவி 2018-இல் வெளியிடப்படலாம். ஆனால் அதன் கூறப்படும் அம்சங்களோ - ஐபோன் எக்ஸ் சாதனத்தை "போட்டுத்தள்ள ரெடியாக" களமிறங்கும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

கருப்பு, தங்கம் மற்றும் ரோஸ் கோல்ட்

கருப்பு, தங்கம் மற்றும் ரோஸ் கோல்ட்

வெளியான தகவல்கள் கூறப்படும் விவோ எக்ஸ்ப்ளே 7 ஆனது கருப்பு, தங்கம் மற்றும் ரோஸ் கோல்ட் (அல்லது பின்க்) ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும் என்று பரிந்துரைக்கின்றன. உடன் ஸ்மார்ட்போனின் முன்பக்கம் ஒரு பெஸல்லெஸ் வடிவமைப்பு கொண்ட ஒரு முழு திரை கொண்டிருக்கும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

சில வடிவ ஒற்றுமை

சில வடிவ ஒற்றுமை

சாதனத்தின் பின்புற ,குழுவை பொறுத்தமட்டில், முந்தைய எக்ஸ்ப்ளே 6 போன்ற சில வடிவ ஒற்றுமைகளை கொண்டுள்ளது. ஒரு 3.5மிமீ ஆடியோ ஜாக், ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஒரு ஜோடி வெளிப்புற ஸ்பீக்கர்களும் வெளியான புகைப்படத்தில் காட்சிப்படுகிறது.

வெளிப்படுத்தும் முதல் லீக்ஸ்

வெளிப்படுத்தும் முதல் லீக்ஸ்

விவோ எக்ஸ்ப்ளே 7 பற்றிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால் அதன் முழுமையான பெஸல்லெஸ் வடிவமைப்பு தான். இதுவரை வெளியான விவரங்களில் மிகவும் வெளிப்படையாக இக்கருவி 100 சதவிகித பாடி-டூ-ஸ்க்ரீன் விகிதம் கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்தும் முதல் லீக்ஸ் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு கட்அவுட்ஸ்

இரண்டு கட்அவுட்ஸ்

இது தவிர ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவிற்கு மேல் பகுதியில் இரண்டு கட்அவுஇரண்டு கட்அவுட்ஸ்ட்ஸ் உள்ளது. அந்த வெட்டுக்கள் இரட்டை செல்பீ கேமராக்களுக்காக அல்லது ஒரு செல்பீ கேமரா மற்றும் ஒரு சென்சார் ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்பது போல தோன்றுகிறது.

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

மேலும் இந்த லீக்ஸ் படங்களின் மூலம் எக்ஸ்ப்ளே 7 ஆனது அதன் டிஸ்பிளேவில் ஒரு ஒளியியல் கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளதையும் அறிய முடிகிறது. கருவியின் ரியர் பக்கத்தினை பொறுத்தமட்டில், ஒரு இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறுகிறது.

சோனி ஐஎம்எக்ஸ் 401 சென்சார்

சோனி ஐஎம்எக்ஸ் 401 சென்சார்

வதந்திகளின்படி அது 4எக்ஸ் ஆப்டிகல் ஜூம் ஆதரவு செயல்படுத்த ஒரு கேமராவாக இருக்க வேண்டும் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ் 401 சென்சார்களும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதர அம்சங்களை பொறுத்தமட்டில், க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 செயலி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குவதாக கருதப்படுகிறது. உடன் அந்த சிப்செட் 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்படக்கூடும்.

சேமிப்பு மாதிரி

சேமிப்பு மாதிரி

இரண்டு வகையான சேமிப்பு மாதிரிகளில் அதாவது 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என்ற உள்ளடக்க சேமிப்பின் கீழ் வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் விவோ எக்ஸ்ப்ளே 7 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை நிர்ணயம் போன்ற விவிவரங்கள் பற்றிய எந்த வார்த்தைகளும் இல்லை.

Best Mobiles in India

English summary
Vivo Xplay 7 renders along with specs leaked; fully bezel-less phone. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X