டூயல் செல்பீ கேமராக்களுடன் விவோ எக்ஸ்9எஸ் மற்றும் எக்ஸ்9எஸ் ப்ளஸ்.!

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சுமார் ரூ.25,600/- மற்றும் சுமார் ரூ.28,500/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளன.

|

எதிர்பார்த்தபடி, விவோ நிறுவனம் சீனாவில் அதன் எக்ஸ்9எஸ் மற்றும் எக்ஸ்9எஸ் ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் இரட்டை செல்பீ கேமரா அமைப்பு திகழ்கிறது மற்றும் இரண்டு கருவிகளும் ஒரு தனிபயன் ரோம் அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் கொண்டு இயங்கும்.

விவோ எக்ஸ்9எஸ் மற்றும் விவோ எக்ஸ்9எஸ் பிளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் சுமார் ரூ.25,600/- மற்றும் சுமார் ரூ.28,500/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளன. இந்த வரிசையின் பெரிய மாறுபாடு ஜூலை 8, சனிக்கிழமையிலிருந்து விற்கப்படும். மறுகையில் ஜூலை 14-ஆம் தேதி முதல் விவோ எக்ஸ்9எஸ் முன்பதிவிற்கு திறந்துவிடப்பட்டு ஜூலை 20-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.

முதன்மை வேறுபாடுகள்

முதன்மை வேறுபாடுகள்

இரண்டு ஸ்மார்ட்போன்களுமே மேட் பிளாக், தங்கம் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய வண்ண விருப்பங்களில் வரும் இருப்பினும் விவோ எக்ஸ்9எஸ் மற்றும் விவோ எக்ஸ்9எஸ் ப்ளஸ் இடையேயான முதன்மை வேறுபாடுகள் சிலவும் உள்ளன, அவைகள் - திரை அளவு, செயலி மற்றும் பேட்டரி ஆகும்.

ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே

ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே

இரண்டு ஸ்மார்ட்போன்களுமே முகப்பு பட்டன் அடியில் உள்ள கைரேகை ஸ்கேனர் கொண்ட ஒரு மெல்லிய உலோக வடிவமைப்பை கொண்டுள்ளன. வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் ஸ்மார்ட்போன்களின் வலது விளிம்பில் அமைந்துள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே அம்சத்துடன் வருகின்றன.

ஹை-ஃபை எக்ஸ்இ680 ஹெட்செட்

ஹை-ஃபை எக்ஸ்இ680 ஹெட்செட்

மேலும் விவோ எக்ஸ்9எஸ் மற்றும் விவோ எக்ஸ்9எஸ் ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றுடன் இலவசமாக ஹை-ஃபை எக்ஸ்இ680 ஹெட்செட் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விவோ எக்ஸ்9எஸ் அம்சங்கள்

விவோ எக்ஸ்9எஸ் அம்சங்கள்

விவோ எக்ஸ்9எஸ் ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளம் அடிப்படையிலான பன்டச் (FunTouch) ஓஎஸ் 3.1 கொண்டு இயங்குகிறது மற்றும் ஒரு இரட்டை சிம் ஸ்லாட்டை ஆதரிக்கிறது. இது 5.5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) அமோஎல்இடி காட்சி கொண்டுள்ளது. இக்கருவி ஸ்னாப்டிராகன் 652 ஆக்டா- கோர் எஸ்ஓசி உடன் இணைக்கப்பட்ட அட்ரெனோ 510 ஜிபியூ கொண்டு இயங்கும். சேமிப்பு ஆதரவை பொறுத்தமட்டில் 4 ஜிபி ரேம், மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 64 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை வழங்குகிறது.

விவோ எக்ஸ்9எஸ் கேமரா

விவோ எக்ஸ்9எஸ் கேமரா

ஸ்மார்ட்போனின் பின்புற கேமராவை பொறுத்தவரை, எல்இடி ஃப்ளாஷ் மற்றும் பிடிஎப் உடனான 16 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது. முன்பக்கம் மெட்டல்-எல்இடி ப்ளாஷ் உடன் இணைந்த ஒரு 20-மெகாபிக்சல் சென்சார் மற்றும் இரண்டாம் நிலை கேமராவாக 5 மெகாபிக்சல் என இரட்டை செல்பீ கேமரா அமைப்பு கொண்டுள்ளது. 4ஜி வோல்ட், வைஃபை 802.11ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி4.2, மைக்ரோ யூஎஸ்பி, யூஎஸ்பி ஓடிஜி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவுகளுடன் பாட் சார்ஜிங் மற்றும் 3320 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ளது. அளவீட்டில் விவோ எக்ஸ்9 எஸ் 152.6x74x6.99 மிமீ மற்றும் 154 கிராம் எடையுடையது.

விவோ எக்ஸ்9எஸ் ப்ளஸ் அம்சங்கள்

விவோ எக்ஸ்9எஸ் ப்ளஸ் அம்சங்கள்

விவோ எக்ஸ்9எஸ் ப்ளஸ் ஆனது ஒரு 5.85 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) அமோஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட சற்று பெரிய கருவியாக உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 653 ஆக்டா-கோர் எஸ்ஓசி ஜோடியாக அட்ரெனோ 510 ஜிபியூ மற்றும் 4ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படுகிறது. 4015 எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்ட இக்கருவி பாஸ்ட் சார்ஜ் அம்சத்தை ஆதரிக்கிறது. விவோ எக்ஸ்9எஸ் பிளஸ் பரிமாணங்களை பொறுத்தமட்டில் 162.59x78.84x7.25 மிமீ கொண்டுள்ளது. மற்றும் இதன் இதர அம்சங்கள் ஆனது விவோ எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனுடன் பொருத்திப்போகிறது.

Best Mobiles in India

English summary
Vivo X9s, Vivo X9s Plus With Dual Selfie Cameras Launched: Price, Specifications, and More. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X