விவோ எக்ஸ்9எஸ் பிளஸ் என்னென்ன சிறப்பம்சங்கள்.!
விவோ எக்ஸ்9எஸ் பிளஸ் செல்பீ கேமரா 20மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது.!
விவோ எக்ஸ்9எஸ் பிளஸ் பொறுத்தமட்டில் ஸ்னாப்டிராகன் 660 செயலி உடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது விவோ நிறுவனம்.
விவோ நிறுவனம் அடுத்து அறிமுகப்படுத்தும் விவோ எக்ஸ்9எஸ் பிளஸ் பொருத்தவரை பல்வேறு மென்பொருள் மேம்பாடுகளுடன் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 5.85அங்குல முழு எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே எனக் கூறப்படுகறது. மேலும் (1080-1920) வீடியோ பிக்சல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

செல்பீ கேமரா:
விவோ எக்ஸ்9எஸ் பிளஸ் பின்புற கேமரா 12மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 20 மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் அடக்கம். இதன் செல்பீ கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, இதன் பல்வேறு விளம்பரங்கள் செல்பீ கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது.

சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும்128ஜிபி வரை மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாப்ட்வேர்:
1.6ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் செயலி இக்கருவி கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1 மார்ஷ்மெல்லோ
மூலம் இவை இயக்கப்படுகிறது.

பேட்டரி:
விவோ எக்ஸ்9எஸ் பிளஸ் பொருத்தவரை 3920எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications