Home
Mobile

அடேங்கப்பா..பெரிய டிஸ்பிளே முதல் தரமான கேமரா வரை எல்லாமே இருக்கு.. அறிமுகமானது புதிய Vivo போன்.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்90எஸ் (vivo X90s) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த போன் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக இந்த விவோ எக்ஸ்90எஸ் ஸ்மார்ட்போன் ஆனது அட்டகாசமான கேமரா மற்றும் தரமான சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இந்த புதிய விவோ போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகாப் பார்ப்போம்.

தரமான கேமராவுடன் புதிய Vivo ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை?

அதாவது 6.78-இன்ச் ஃபுல் எச்டி BOE Q9 OLED டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

3.35 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 9200 பிளஸ் 4என்எம் பிராசஸர் உடன்Immortalis-G715 GPU ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்90எஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங் பயன்பாட்டுக்குத் தகுந்தபடி இந்த போனில் பிராசஸர் அமைந்துள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த விவோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

தரமான கேமராவுடன் புதிய Vivo ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை?

அதேபோல் OriginOS 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ எக்ஸ்90எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ எக்ஸ்90எஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 866 பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.

4800 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த விவோ எக்ஸ்90எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்ய முடியும்.

தரமான கேமராவுடன் புதிய Vivo ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை?

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்90எஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய விவோ போன்.

கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் இந்த விவோ எக்ஸ்90எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போனின் ஆரம்ப விலை 3,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.45,330). ஜூன் 30 அன்று சீனாவில் விற்பனைக்கு வருகிறது இந்த போன்.

Best Mobiles in India

English summary
Vivo X90S launched with Dimensity 9200 Plus processor: Check Price, Specs, More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X