டிஜிட்டல் கேமராக்களுக்கு வேலை இருக்காது போலயே: சோனி கேமராவுடன் அறிமுகமான 2 புதிய Vivo போன்கள்.!
விவோ நிறுவனம் சர்வதேச சந்தையில் விவோ எக்ஸ்90 மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சோனி கேமரா சென்சார், தரமான சிப்செட் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சாம்சங் எஸ்23 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியா இந்த விவோ எக்ஸ்90 மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளன. இப்போது இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ எக்ஸ்90 போனின் அம்சங்கள்
விவோ எக்ஸ்90 போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,260x 2,800 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் 4என்எம் மீடியாடெக் Dimensity 9200 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த Dimensity 9200 சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி Sony IMX866 பிரைமரி சென்சார் + 12எம்பி போர்ரெயிட் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

4810எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, 4ஜி, வைஃபை 6, புளூடூத் 5.3, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ போன்.
விவோ எக்ஸ்90 போனின் விலை?
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போனின் விலை MYR 3,699 (இந்திய மதிப்பில் ரூ.71,600) ஆக உள்ளது. பின்பு இந்த போன் ப்ரீஸ் புளூ மற்றும் ஆஸ்டிராய்டு பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவோ எக்ஸ்90 ப்ரோ அம்சங்கள்
6.78-இன்ச் curved ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 1,260x 2,800 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த புதிய போனில் 4870 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
இந்த விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி Sony IMX989 1-இன்ச் பிரைமரி சென்சார் + 50எம்பி போர்ட்ரெயிட் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போன் 4-என்எம் மீடியாடெக் Dimensity 9200 சிப்செட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, என்எப்சி, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ போன்.
விவோ எக்ஸ்90 ப்ரோ விலை
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை MYR 4,999 (இந்திய மதிப்பில் ரூ.96,800) ஆக உள்ளது அதேபோல் இந்த கருப்பு நிறத்தில் வெளிவந்துள்ளது. குறிப்பாக விவோ எக்ஸ்90 மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் ஏ2 இமேஜிங் சிப் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








