ஸ்மார்ட்போன் வாங்குவோர் கவனத்திற்கு.. என்னென்ன வேணுமோ மொத்தமும் இந்த போனில் இருக்கு!

|

ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு வெவ்வேறு விலைப் பிரிவில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் வெவ்வேறு வடிவமைப்பில் வெளியாகிறது. பட்ஜெட் விலை, மிட் ரேன்ஜ் விலை மற்றும் ப்ரீமியம் விலை என பல விலைப் பிரிவுகளில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகிறது.

எந்த போனை வாங்குவது?

எந்த போனை வாங்குவது?

ஏதாவது ஒரு ஸ்மார்ட்போனை வாங்கலாம் என திட்டமிட்டாலும் அந்த விலைப்பிரிவில் பலத்த போட்டிகள் இருக்கிறது. இந்த போனில் இருக்கும் சிறப்பம்சம் அந்த போனில் இல்லை, அந்த போனில் இருக்கும் அம்சம் இந்த போனில் இல்லை. எனவே எந்த போனை வாங்குவது என்பதில் பெரிய குழப்பம் வரும்.

டூயல் காட்சி மற்றும் டிரிபிள் ரியர் கேமரா

டூயல் காட்சி மற்றும் டிரிபிள் ரியர் கேமரா

இந்த அனைத்துக்கும் மத்தியில் ஒருசில போன்கள் அனைத்து எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் வெளியாகிறது. அதன்படி விவோ தரப்பில் ஒரு போன் வெளியாக இருக்கிறது. நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பது Vivo X90 குறித்து தான். இந்த ஸ்மார்ட்போனானது டூயல் காட்சி மற்றும் டிரிபிள் ரியர் கேமரா விருப்பங்களைக் கொண்டுள்ளது.

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

Vivo X90 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனானது 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போனில் BOE Q9 மற்றும் Samsung E6 பேனல் என இரண்டு வெவ்வேறு காட்சி விருப்பங்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம்

நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போனானது நவம்பர் 22 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. Vivo X90 ஆனது 50 மெகாபிக்சல்கள் பிரதான கேமரா சென்சார்கள் உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்பது வெளியான டீசர் படம் மூலம் தெரியவந்துள்ளது.

இரண்டு வெவ்வேறு காட்சி விருப்பங்கள்

இரண்டு வெவ்வேறு காட்சி விருப்பங்கள்

நவம்பர் 22 அறிமுகமாக இருக்கும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் குறித்து அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் மற்றும் இரண்டு வெவ்வேறு காட்சிகளுடன் வரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இதில் இந்த ஸ்மார்ட்போனில் BOE Q9 மற்றும் Samsung E6 பேனல் என இரண்டு வெவ்வேறு காட்சி விருப்பங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

விரைவில் உலகளவில் வெளியாகும்

விரைவில் உலகளவில் வெளியாகும்

விவோ நிறுவனம் கடந்த சில காலமாகவே Vivo X90 சீரிஸ் ஸ்மார்ட்போனில் வேலை செய்து வருகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆரம்பக் கட்டமாக சீனாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டாலும் விரைவில் உலகளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ எக்ஸ்90 சீரிஸ்

விவோ எக்ஸ்90 சீரிஸ்

விவோ எக்ஸ்90 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல் சமீபகாலமாகவே கசிந்த வண்ண இருக்கிறது. இவை அனைத்தும் ஸ்மார்ட்போனின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் இருக்கிறது. Vivo X90, Vivo X90 Pro மற்றும் Vivo X90 Pro+ ஆகியவற்றின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட், வண்ண விருப்பங்கள் உள்ளிட்டவைகள் லீக் ஆகி இருக்கிறது. Vivo X90 Pro+ ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் கீக்பெஞ்சில் முன்னதாக வெளியானது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

விவோ எக்ஸ்90 சீரிஸ் கிடைக்கும் தன்மை

விவோ எக்ஸ்90 சீரிஸ் கிடைக்கும் தன்மை

விவோ எக்ஸ்90 சீரிஸ் குறித்து வெளியான தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போனின் வெண்ணிலா பதிப்பு நான்கு மெமரி வகைகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதாவது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், ஐஸ் ப்ளூ மற்றும் ரெட் வண்ண விருப்பங்களில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo X90 Smartphone Specs Officially Teased by Vivo a head of Launch: Two Different Display, 120W Fast Charging!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X