இன்னும் சில நாட்கள் மட்டும் வெயிட் பண்ணுங்க! வெயிட்டா இந்தியாவுக்கு வரும் Vivo X90 சீரிஸ்.!

|

விவோ நிறுவனம் Vivo X90 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டவர்களை கண்டிப்பாக காத்திருக்க வைக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

விரைவில் இந்தியாவுக்கு வரும் விவோ எக்ஸ்90 சீரிஸ்

விரைவில் இந்தியாவுக்கு வரும் விவோ எக்ஸ்90 சீரிஸ்

விவோவின் Vivo X90 சீரிஸ் ஸ்மார்ட்போனானது Bureau of Indian Standards (BIS) இணையதளத்தில் காணப்பட்டிருக்கிறது. பிஐஎஸ் இணையதளத்தில் வி2218 என்ற மாடல் எண்ணுடன் இது காணப்பட்டிருக்கிறது. மேலும் இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போனானது 6.78 இன்ச் அமோலெட் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.

புதிய விவோ சீரிஸ் ஸ்மார்ட்போன்

புதிய விவோ சீரிஸ் ஸ்மார்ட்போன்

விவோ எக்ஸ்80 சீரிஸ் இன் வாரிசாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்னவாக இருக்கும் என்பதை ஓரளவு கணித்துவிடலாம். காரணம், இந்த ஸ்மார்ட்போன் முன்னதாகவே சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகி இருக்கிறது. இந்த புதிய விவோ சீரிஸ் ஸ்மார்ட்போனானது Bureau of Indian Standards (BIS) இணையதளத்தில் காணப்பட்டது. இதன்மூலம் இந்த போன் விரைவில் அறிமுகமாகும் என்பதை உறுதி செய்ய முடிகிறது.

Vivo X90 சீரிஸ்

Vivo X90 சீரிஸ்

Vivo X90 ஆனது BIS இணையதளத்தில் V2218 என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்டதாக My Smart Price தெரிவிக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகும் விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போனில் என்ன அம்சங்கள் இருக்கும் என்பது குறித்த தகவல் எதுவும் உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் இதே ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமான காரணத்தால் இதன் அம்சங்களை ஓரளவு கணித்துவிடலாம். இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஏறத்தாழ ஒரேமாதிரியான அம்சங்களைக் கொண்டிருக்கும் என்றே தகவல்கள் தெரிவிக்கிறது.

Vivo X90 சீரிஸ்: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Vivo X90 சீரிஸ்: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Vivo X90 சீரிஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்தியாவில் தோராயமாக ரூ.42,400 ஆக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல் இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் RMB 4999 (தோராயமாக ரூ.57,200) எனவும் 12 ஜிபி ரேம் மற்ரும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் RMB 6,499 (தோராயமாக ரூ.74,400) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Vivo X90 சீரிஸ்: சிறப்பம்சங்கள்

Vivo X90 சீரிஸ்: சிறப்பம்சங்கள்

Vivo X90 சீரிஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். சீனாவில் இந்த அம்சங்கள் உடன் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கிறது. இதே அம்சங்கள் இந்திய மாடல்களிலும் இடம்பெறலாம்.

விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போனில் எச்டிஆர்10+ ஆதரவுடன் கூடிய 6.78 இன்ச் AMOLED 120Hz ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 300 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகித ஆதரவை கொண்டிருக்கிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 9200 சிப்

மீடியாடெக் டைமன்சிட்டி 9200 சிப்

Vivo X90 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 9200 சிப் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் Vivo X90 ஸ்மார்ட்போனில் 120 வாட்ஸ் வயர்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4810 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. aptX HD மற்றும் Hi-Res ஆடியோவுக்கான ஆதரவுடன் கூடிய ஸ்பீக்கர்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

OIS மற்றும் EIS ஆதரவு

OIS மற்றும் EIS ஆதரவு

Vivo X90 சீரிஸ் இன் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இதில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் OIS மற்றும் EIS ஆதரவுடன் கூடிய 50 எம்பி IMX866 முதன்மை சென்சார், 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 12 எம்பி போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 12 எம்பி அல்ட்ராவைட் சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமரா இருக்கிறது.

120 வாட்ஸ் வயர்ட் சார்ஜிங்

120 வாட்ஸ் வயர்ட் சார்ஜிங்

விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடலில், 6.78 இன்ச் 2கே அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 300 ஹெர்ட்ஸ் டச் மாதிரி ஆதரவைக் கொண்டிருக்கிறது இதன் டிஸ்ப்ளே. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 9200 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 120 வாட்ஸ் வயர்ட் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4870 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

பக்கா மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்

பக்கா மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. OIS மற்றும் EIS உடன் கூடிய 50 எம்பி IMX866 முதன்மை சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆப்டிகல் ஜூம் ஆதரவு கொண்ட 50 எம்பி கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ராவைட் கேமரா இடம்பெற்றிருக்கிறது. இதன் முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பக்கா மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கும் என்பது இதன் அம்சங்களை வைத்தே கணித்துவிடலாம். நீங்கள் புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

Best Mobiles in India

English summary
Vivo X90 Series Might Launching Soon in India With 50MP Primary Camera, 12GB RAM and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X