2023 வரை காத்திருங்கள்! Vivo கொண்டு வரும் புத்தாண்டு பரிசு: தரமான ஸ்மார்ட்போன் உறுதி.!

|

Vivo X90 Pro ஸ்மார்ட்போன் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய பதிப்பு Geekbench, EEC மற்றும் Wireless Power Consortium சான்றிதழ் தளத்தில் காணப்பட்டிருக்கிறது.

Vivo X90 Pro குறித்த தகவல்

Vivo X90 Pro குறித்த தகவல்

Vivo X90 சீரிஸ் ஆனது கடந்த மாதம் இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சீரிஸ் இல் விவோ எக்ஸ்90, விவோ எக்ஸ்90 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ+ ஆகிய மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த போன் இந்தியா உட்பட உலகளாவிய சந்தையில் ஜனவரி 2023 இல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல் கடந்த சில நாட்களாகவே உலா வந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் Vivo X90 Pro உலகளாவிய மாறுபாடு Geekbench தரப்படுத்தல் தளத்தில் மாடல் எண் V2219 உடன் தோன்றியுள்ளது.

50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

கீக்பெஞ்ச் பட்டியலின் படி, இந்த போன் சிங்கிள் கோர் சோதனையில் 1376 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 4327 புள்ளிகளையும் பெற்றிருக்கிறது. ஆக்டோ கோர் செயலி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படும் என்பதை இந்த பட்டியல் காட்டுகிறது. 12 ஜிபி ரேம் ஆதரவுடன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இடம்பெறும் என தகவல்கள் கூறுகிறது.

Vivo X90 Pro சிறப்பம்சங்கள்

Vivo X90 Pro சிறப்பம்சங்கள்

Vivo X90 Pro முன்னாதாகவே சீனாவில் அறிமுகம் செய்த காரணத்தால் இதன் அம்சங்களை ஓரளவு கணித்துவிடலாம்.

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவலை பார்க்கலாம். ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியுடன் இந்த விவோ எக்ஸ் 90 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஃபுல் எச்டி டிஸ்ப்ளே

ஃபுல் எச்டி டிஸ்ப்ளே

இந்த விவோ எக்ஸ் 90 ப்ரோ போன் ஃபுல் எச்டி டிஸ்ப்ளேவுடன் வெளிவரும். அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் களமிறங்கும் இந்த விவோ எக்ஸ் 90 ப்ரோ மாடல். அதேபோல் இந்த போனில் 1-இன்ச் கேமரா சென்சார் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vivo X90 Pro சிறப்பம்சங்கள்

Vivo X90 Pro சிறப்பம்சங்கள்

Vivo X90 Pro சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 2,800×1,260 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியுடன் கூடிய 6.78 இன்ச் 2K AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது HDR100+, மற்றும் HDR10Hz டச் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமென்சிட்டி 9200 சிப்செட் மற்றும் 12 ஜிபி ரேம் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OriginOS 3 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படும்.

120 வாட்ஸ் வயர்டு சார்ஜிங்

120 வாட்ஸ் வயர்டு சார்ஜிங்

Vivo X90 Pro ஸ்மார்ட்போனானது 120 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் உடன் 4870 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறலாம் என கணிக்கப்படுகிறது. 5ஜி, 4ஜி எல்டிஇ, என்எஃப்சி, டூயல் பேண்ட் வைஃபை 6 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

Vivo X90 Pro ஸ்மார்ட்போனின் கேமரா

Vivo X90 Pro ஸ்மார்ட்போனின் கேமரா

Vivo X90 Pro ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இதில் டிரிபிள் ரியர் கேமராக்கள் இடம்பெறலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போனில் OIS, EIS மற்றும் LED ஃபிளாஷ் உடன் கூடிய 50MP IMX866 முதன்மை சென்சார், 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 12 எம்பி அல்ட்ராவைட் ஷூட்டர் ஆதரவு என 3 கேமராக்கள் இடம்பெறலாம். அதேபோல் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என இந்த ஸ்மார்ட்போனில் 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி மாதம் அறிமுகமாகும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே நீங்கள் புது ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இன்னும் சிறிது காலம் மட்டும் காத்திருந்தால் போதும்.

Best Mobiles in India

English summary
Vivo X90 Pro Smartphone Appeared on Geekbench list: mediaTek dimensity 9200 chipset, Android 13 OS and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X