அப்படி போடு.. முழுசா ரூ.10,000 விலைக்குறைப்பு.. இனி இந்த Vivo போனின் விற்பனை பிச்சுக்க போகுது..
விவோ நிறுவனம் இந்தியாவில் தனித்துவமான கேமரா அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக விவோ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தரமான கேமரா அம்சத்தைக் கொண்ட விவோ போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது விவோ நிறுவனம் தற்போது விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தான் விலை குறைப்பு அறிவித்துள்ளது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்90 ப்ரோ ஆனது ரூ.84,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே விவோ எக்ஸ்90 ப்ரோ போனை இப்போது ரூ.74,999 விலையில் வாங்க முடியும்.

தற்போது இந்த விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட், விவோ இந்தியா இணையதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
6.78-இன்ச் கர்வ்ட் (curved) ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 1,260x 2,800 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.
விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி Sony IMX989 1-இன்ச் பிரைமரி சென்சார் + 50எம்பி போர்ட்ரெயிட் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல 4870 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவோ எக்ஸ்90 ப்ரோ (Vivo X90 Pro) ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த 4-என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9200 (Dimensity 9200) சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங், கேமிங் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, என்எப்சி, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ போன்.
அதேபோல் இந்த விவோ ஸ்மார்ட்போன் டிஎஸ்எல்ஆர் கேமராக்களுக்கு போட்டி கொடுக்கும் விதமாகத் தரமான கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே வீடியோ மற்றும் புகைப்படங்களைத் தரமாக எடுக்க விரும்பும் பயனர்கள் இந்த இரண்டு விவோ ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது. மேலும் விவோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








