இந்த Vivo போனை அவ்வளவு சீக்கிரம் மறக்கவே மாட்டாங்க: அப்படியென்ன இதுல ஸ்பெஷல்.!
விவோ நிறுவனம் Vivo X90 Pro+ எனும் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. விரைவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் கசிந்த தகவலின்படி இந்த விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் மாடல் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

AMOLED டிஸ்பிளே
இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம். விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் ஆனது
2கே ஆதரவு கொண்ட 6.78-இன்ச் Samsung E6 AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்
இந்த விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விவோ போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

50எம்பி பிரைமரி கேமரா
விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் போன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா + 48 megapixel ultra-wide angle shooter + 50எம்பி போர்ட்ரெயிட் சென்சார் + 64எம்பி periscope lens என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

4700 எம்ஏஎச் பேட்டரி
குறிப்பாக இந்த போனின் மிக முக்கியமான ஸ்பெஷல் என்றால் அது கேமரா தான். அதாவது இதன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம். மேலும் 4700 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் இந்த அட்டகாசமான போன். குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y52 5G (2022)
இந்த விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போன் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1,080x2,408 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த விவோ போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 12
விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

48எம்பி மெயின் கேமரா
இந்த விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போன் ஆனது 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி
விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன்.
இந்த விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போன் தற்போது தைவானில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன்அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications